வர்த்தகம்

அட்மா கூட்டமைப்பின் தலைவராக கே.எம்.மேமன் தேர்வு

DIN


மோட்டார் வாகன டயர் உற்பத்தியாளர்களின் கூட்டமைப்பின் (அட்மா) தலைவராக எம்ஆர்எஃப் நிறுவனத்தின் தலைவரும், நிர்வாக இயக்குநருமான கே.எம். மேமன் ஒருமனதாக திங்கள்கிழமை தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்த கூட்டமைப்பின் துணைத் தலைவர் பொறுப்புக்கு ஜேகே டயர் & இண்டஸ்ட்ரீஸின் முழு நேர இயக்குநர் அனுஷ்மான் சிங்கானியா தேர்வு செய்யப்பட்டார்.
அதேபோன்று, சியட் நிறுவனத்தின் துணைத் தலைவர் (கொள்முதல்) ரூபேஷ் ஆர். அட்மா கூட்டமைப்பின் விநியோக தொடர்பு மற்றும் வளங்கள் பிரிவின் தலைவராகிறார்.  
இவர்களைத் தவிர, ஜேகே டயர் &  இண்டஸ்ட்ரீஸின் தொழில்நுட்ப இயக்குநர் வி.கே. மிஷ்ரா அட்மாவின் தொழில்நுட்பம், சுற்றுச்சூழல், பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய குழுவில் தலைமை பொறுப்பை ஏற்றுள்ளார் என அந்த கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவிஷீல்டு பக்கவிளைவுகளை ஆய்வு செய்ய எய்ம்ஸ் மருத்துவக் குழு -உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்

127 ஆண்டுகால கோட்டை.. இரண்டாக உடையும் கோத்ரேஜ் குழுமம்

கருமுட்டையைப் பாதுகாத்து வைத்த பிரபல நடிகை!

கடனை செலுத்திவிட்டு மனைவியை அழைத்துச் செல்: தனியார் வங்கி அட்டூழியம்

உலகக் கோப்பையில் வேறு மாதிரி விளையாடுவார்: ஹார்திக் பாண்டியாவுக்கு ஆதரவளித்த கவாஸ்கர்!

SCROLL FOR NEXT