வர்த்தகம்

விதிமீறல்: பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு ரூ.2 கோடி அபராதம்: ரிசர்வ் வங்கி

DIN


பணப்பரிவர்த்தனை தொடர்பான ஸ்விப்ட் விதிமுறைகளை கடைபிடிக்கத் தவறிய பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு (பிஎன்பி) ரூ.2 கோடி அபராதம் விதிப்பதாக ரிசர்வ் வங்கி செவ்வாய்க்கிழமை அறிவித்தது. 
நிதித் துறை நிறுவனங்கள் மேற்கொள்ளும் பரிவர்த்தனைகள் தொடர்பான சர்வதேச தகவல் பரிமாற்றத்துக்கு ஸ்விப்ட் மென்பொருள் பயன்படுத்தப்படுகிறது. பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.14,000 கோடி கடன் வாங்கிய நீரவ் மோடி  மற்றும் அவரது மாமா மெஹுல் சோக்ஸி ஆகியோர் ஸ்விப்ட் மென்பொருளை தவறாக பயன்படுத்தி மோசடி ஈடுபட்டனர்.
இந்த நிலையில், ஸ்விப்ட் மென்பொருள் செயல்பாடு தொடர்பான விதிமுறைகளை மீறியதற்காக பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு ரிசர்வ் வங்கி ரூ.2 கோடி அபராதம் விதித்துள்ளது.
இதுகுறித்து செபி-க்கு அளிக்கப்பட்ட அறிக்கையில் பஞ்சாப் நேஷனல் வங்கி தெரிவித்துள்ளதாவது: 
பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு,  ரிசர்வ் வங்கி அனுப்பிய  மார்ச் 25-ஆம் தேதியிட்ட கடிதத்தில் இந்த அபராதம் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்விப்ட் நடைமுறைப்படுத்தியதில் ஒழுங்காற்று விதிமுறைகளை மீறியதற்காக இந்த ரூ.2 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்று அதில் பிஎன்பி தெரிவித்துள்ளது.
ஸ்விப்ட் மென்பொருள் நிறுவுதல் செயல்பாட்டில் கவனக்குறைவாக செயல்பட்ட 36 பொது, தனியார் மற்றும் வெளிநாட்டு வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி ஏற்கெனவே ரூ.71 கோடியை அபராதமாக விதித்துள்ளது. ஆனால், அப்போது அந்தப் பட்டியலில் பிஎன்பி இடம்பெறவில்லை.
குறிப்பாக, எஸ்பிஐ, ஐசிஐசிஐ வங்கி, ஹெச்எஸ்பிசி, பேங்க் ஆப் பரோடா, சிட்டி பேங்க், கனரா வங்கி, யெஸ் வங்கி ஆகியவை அபராத பட்டியலில் இடம்பெற்றிருந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

ஹைதராபாதை வீழ்த்தியது சென்னை!

SCROLL FOR NEXT