வர்த்தகம்

சில்லறை பணவீக்கம் 2.92%-ஆக அதிகரிப்பு

DIN


சில்லறை பணவீக்கம் கடந்த ஏப்ரல் மாதத்தில் 2.92 சதவீதமாக அதிகரித்துள்ளது.
இதுகுறித்து மத்திய புள்ளியியல் அலுவலகம் (சிஎஸ்ஓ) திங்கள்கிழமை வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளதாவது:
நுகர்வோர் விலை குறியீட்டு எண் அடிப்படையில் கணக்கிடப்படும் சில்லறை பணவீக்கம் நடப்பாண்டு ஏப்ரல் மாதத்தில் 2.92 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதற்கு முன்பு 2018 அக்டோபரில்தான் சில்லறை பணவீக்கம் 3.38 சதவீதமாக அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில், ஆறு மாதங்களுக்குப் பிறகு சில்லறை பணவீக்கம் தற்போதுதான் இந்த அளவுக்கு உயர்வைக் கண்டுள்ளது.  
சில்லறைப் பணவீக்கம் நடப்பாண்டு மார்ச் மாதத்தில் 2.86 சதவீதமாகவும், கடந்தாண்டு ஏப்ரலில் 4.58 சதவீதமாகவும் காணப்பட்டது. காய்கறிகள் உள்ளிட்ட உணவுப் பொருள்களின் விலை உயர்வின் காரணமாகவே ஏப்ரலில் பணவீக்கம் அதிகரித்துள்ளது. மார்ச் மாதத்தில் காய்கறிகளின் விலை குறைந்திருந்த நிலையில் ஏப்ரலில் அவற்றின் விலை 2.87 சதவீதம் அதிகரித்துள்ளது.  அதேசமயம், முந்தைய மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் பழங்களின் விலை ஏப்ரல் மாதத்தில் குறைந்திருந்ததாக புள்ளிவிவரத்தில் சிஎஸ்ஓ தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா!

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகளும் சீரமைப்பு

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

பிரசாரம் செய்ய பணமில்லை: தேர்தலில் இருந்து விலகும் புரி காங்கிரஸ் வேட்பாளர்

ராகுலை பிரதமராக்க விரும்பும் பாகிஸ்தான் தலைவர்கள்: பிரதமர் மோடி

SCROLL FOR NEXT