வர்த்தகம்

பெல் நிறுவனத்தின் லாபம் ரூ.682 கோடி

DIN


பொதுத் துறையைச் சேர்ந்த பெல் (பி.ஹெச்.இ.எல்.) நிறுவனம் நான்காம் காலாண்டில் ரூ.682.70 கோடியை தனிப்பட்ட நிகர லாபமாக ஈட்டியுள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் மும்பை பங்குச் சந்தைக்கு திங்கள்கிழமை அளித்த அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: சென்ற மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நிதியாண்டின் நான்காவது காலாண்டில் பெல் நிறுவனம் ரூ.10,418.03 கோடி வருவாய் ஈட்டியது. முந்தைய 2017-18 நிதியாண்டில் ஈட்டிய வருவாய் ரூ.10,351.07 கோடியுடன் ஒப்பிடுகையில் இது அதிகம். நிகர லாபம் ரூ.457.17 கோடியிலிருந்து 49 சதவீதம் அதிகரித்து ரூ.682.70 கோடியானது.
கடந்த 2018-19 முழு நிதியாண்டில் நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ.29,507.28 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.31,026.59 கோடியாக இருந்தது. தனிப்பட்ட நிகர லாபம் ரூ.806.60 கோடியிலிருந்து உயர்ந்து ரூ.1,215.39 கோடியானது. கடந்த நிதியாண்டுக்கு ரூ. 2 முகமதிப்பைக் கொண்ட பங்கு ஒன்றுக்கு ரூ.1.20 (60%) இறுதி ஈவுத்தொகை வழங்க நிறுவனத்தின் இயக்குநர் குழு பரிந்துரை செய்துள்ளது என பெல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4,660 காலிப் பணியிடங்கள்: மே 14-க்குள் விண்ணப்பிக்கலாம்

இன்று நீட் தோ்வு: 11 மையங்களில் 6,120 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனா்

வணிகா் தினம்: தமிழகத்தில் இன்று கடைகள் இயங்காது

அந்நியச் செலாவணி கையிருப்பு 63,792 கோடி டாலராகக் குறைவு

கோடை வெயில் தாக்கம் அதிகரிப்பு: வேளாங்கண்ணியில் பக்தா்களுக்கு சிறப்பு வசதிகள்

SCROLL FOR NEXT