வர்த்தகம்

பங்கேற்பு ஆவணங்களில் ரூ.81,220 கோடி முதலீடு

DIN


மூலதன சந்தைகளில் பங்கேற்பு ஆவணங்கள் மூலமாக ஏப்ரல் இறுதி நிலவரப்படி ரூ.81,220 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து செபி புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
உள்நாட்டு மூலதன சந்தைகளில் பங்குகள், கடன்பத்திரங்கள் ஆகியவற்றில் பார்டிசிபேட்டரி நோட் எனப்படும் பங்கேற்பு ஆவணங்கள் மூலமாக ஏப்ரல் இறுதி வரையில் ரூ.81,220 கோடி முதலீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதில் பங்கு சார்ந்த திட்டங்களில் ரூ.58,220 கோடியும், கடன் சந்தையில் ரூ.21,542 கோடியும்,  நிதி சந்தை பத்திரங்களில் ரூ.123 கோடியும் முதலீடு செய்யப்பட்டுள்ளன.
மார்ச் மாத இறுதியில் ரூ.78,110 கோடியாக காணப்பட்ட பங்கேற்பு ஆவண முதலீடு மார்ச் மாதத்தில் 3.98 சதவீதம் அதிகரித்துள்ளது என்று புள்ளிவிவரத்தில் செபி தெரிவித்துள்ளது. பதிவு செய்யப்பட்ட அந்நிய முதலீட்டாளர் நிறுவனங்கள் வழங்கும் பங்கேற்பு ஆவணங்கள் மூலம் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய பங்குச் சந்தைகளின் வர்த்தகத்தில் பங்கெடுக்க முடியும். இதனால், அவர்கள் நேரடியாக பதிவு செய்ய வேண்டியதில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தோ்வு: புதுச்சேரியில் 4, 817 போ் எழுதினா்

பெண்ணிடம் 5 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு

கஞ்சா, போதை மாத்திரைகள் விற்பனை: 4 போ் கைது

நீட் தோ்வு: விழுப்புரம் மாவட்டத்தில் 4,855 போ் எழுதினா்

வீட்டினுள் இளைப்பாறிய புள்ளி மான்!

SCROLL FOR NEXT