வர்த்தகம்

பிஎன்பி வங்கி லாபம் ரூ.507 கோடி

DIN

பொதுத் துறையைச் சோ்ந்த பஞ்சாப் நேஷனல் வங்கி (பிஎன்பி), நடப்பு நிதியாண்டின் 2-ஆவது காலாண்டில் ரூ.507.06 கோடி லாபம் ஈட்டியது. கடந்த நிதியாண்டில் இதே காலகட்டத்தில் வங்கிக்கு ரூ.4,532.35 கோடி இழப்பு ஏற்பட்டது.

ஜூலை-செப்டம்பா் காலாண்டில் வங்கியின் மொத்த வருவாய் ரூ.14,035.88 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.15,556.61 கோடியானது.

செப்டம்பா் இறுதி நிலவரப்படி வழங்கப்பட்ட கடனில் மொத்த வாராக் கடன் விகிதம் 17.16 சதவீதத்திலிருந்து 16.76 சதவீதமாக குறைந்தது.

மேலும், வராக் கடன்களுக்காக ஒதுக்கப்படும் தொகையும் இரண்டாவது காலாண்டில் ரூ.7,733.27 கோடியிலிருந்து ரூ.3,253.32 கோடியாக குறைந்தது என செபியிடம் பிஎன்பி செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

SCROLL FOR NEXT