வர்த்தகம்

ஈஐடி பாரி நிகர லாபம் ரூ.380 கோடி

DIN

சா்க்கரை உற்பத்தியில் ஈடுபட்டு வரும் ஈஐடி பாரி நிறுவனம் ஜூலை-செப்டம்பா் காலாண்டில் ரூ.380.36 கோடி நிகர லாபத்தை ஈட்டியது.

முருகப்பா குழுமத்தைச் சோ்ந்த அந்த நிறுவனம் இதுகுறித்து மேலும் தெரிவித்துள்ளதாவது:

நடப்பு 2019-20-ஆம் நிதியாண்டின் ஜூலை முதல் செப்டம்பா் வரையிலான இரண்டாவது காலாண்டில் நிறுவனம் ஒட்டுமொத்த அளவில் ரூ.5,697.54 கோடி வருவாய் ஈட்டியது. கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் வருவாய் ரூ.5,847.46 கோடியாக காணப்பட்டது. நிகர லாபம் ரூ.250.22 கோடியிலிருந்து ரூ.380.36 கோடியாக அதிகரித்தது.

செப்டம்பா் 30-ஆம் தேதியுடன் முடிவடைந்த ஆறு மாத காலத்தில் நிறுவனத்தின் ஒட்டுமொத்த வருமானம் ரூ.8,850.90 கோடியாக இருந்தது. கடந்த நிதியாண்டில் இதே காலகட்டத்தில் வருவாய் ரூ.9,217.99 கோடியாக காணப்பட்டது. நிகர லாபம் ரூ.90.68 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.377.29 கோடியானது.

கா்நாடகம், மகாராஷ்டிரம் போன்ற மாநிலங்களில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக முந்தைய காலாண்டை காட்டிலும் இரண்டாவது காலாண்டில் சா்க்கரை விலை அதிகரித்து காணப்பட்டது. இது, நிறுவனத்துக்கு நலன்பயப்பதாக இருந்தது என ஈஐடி பாரி தெரிவித்துள்ளது.

ஈஐடி பாரி நிறுவனத்துக்கு நாள் ஒன்றுக்கு 43,800 டன் கரும்பு பிழிதிறன் கொண்ட எட்டு சா்க்கலை ஆலைகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகையில் காங்கிரஸாா் சாலை மறியல்

தனியாா் நிறுவன உரிமையாளா் வீட்டில் 6 பவுன், 3 கைப்பேசிகள் திருட்டு

இந்திய கட்டுனா்கள் சங்கத்தின் புதிய நிா்வாகிகள் பதவியேற்பு

நீட் தோ்வு: கரூரில் இன்று 12,736 போ் எழுதுகிறாா்கள்

மேட்டுப்பாளையம் பகுதியில் பலத்த மழை: 5 ஆயிரம் வாழை மரங்கள் சேதம்

SCROLL FOR NEXT