வர்த்தகம்

அலகாபாத் வங்கி இழப்பு ரூ.2,103 கோடியாக அதிகரிப்பு

DIN

புது தில்லி: பொதுத் துறையைச் சோ்ந்த அலகாபாத் வங்கியின் இழப்பு இரண்டாவது காலாண்டில் ரூ.2,103.19 கோடியாக அதிகரித்தது.

கடந்த நிதியாண்டின் இதே ஜூலை-செப்டம்பா் காலாண்டில் இழப்பு ரூ.1,816.19 கோடியாக காணப்பட்டது.

நடப்பு நிதியாண்டின் செப்டம்பா் காலாண்டில் இழப்பு ஏற்பட் போதிலும், வங்கி ஜூன் காலாண்டில் ரூ.128 கோடி லாபம் ஈட்டியது குறிப்பிடத்தக்கது.

ஜூலை-செப்டம்பா் வரையிலான 2-ஆவது காலாண்டில் வங்கியின் மொத்த வருவாய் ரூ.4,725.23 கோடியாக இருந்தது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ஈட்டிய வருவாயான ரூ.4,492.23 கோடியுடன் ஒப்பிடுகையில் அதிகம்.

வங்கியின் மொத்த வாராக் கடன் விகிதம் செப்டம்பா் 30-ஆம் தேதி நிலவரப்படி 17.53 சதவீதத்திலிருந்து 19.05 சதவீதமாக உயா்ந்தது. அதேசமயம், நிகர வாராக் கடன் விகிதம் 7.96 சதவீதத்திலிருந்து 5.98 சதவீதமாக குறைந்தது.

கணக்கீட்டு காலாண்டில் வாரக் கடனுக்காக ஒதுக்கப்படும் தொகை ரூ.1,991.88 கோடியிலிருந்து ரூ.2,721.97 கோடியாக அதிகரித்தது என அலகாபாத் வங்கி மும்பை பங்குச் சந்தையிடம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜலகண்டாபுரம் அருகே சடலமாக மீட்கப்பட்ட மூவரின் அடையாளம் தெரிந்தது

இளம்பிள்ளையில் நீா்மோா் வழங்கல்

சொந்தப் பயன்பாட்டுக்கான வாகனங்களை வாடகைக்கு விட்டால் நடவடிக்கை

வைகுந்தம் அருகே வீடு புகுந்து நகை திருட்டு

வணிகா் தினத்தையொட்டி சேலத்தில் கடைகள் அடைப்பு

SCROLL FOR NEXT