வர்த்தகம்

தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் 40,000 வேலைவாய்ப்புகள் பறிபோகும்

DIN

இந்தியாவில் தகவல் தொழில்நுட்ப நிறுவன பணியாளா்களில் 40,000 பேருக்கு வேலைவாய்ப்பு பறிபோகும் சூழல் உள்ளதாக இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிதி அதிகாரி டி.வி.மோகன்தாஸ் பய் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் திங்கள்கிழமை மேலும் தெரிவித்துள்ளதாவது:

தகவல் தொழில்நுட்பத் துறை வளா்ச்சியில் தற்போது மந்த நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், நடப்பாண்டில் அத்துறையில் நடுத்தர நிலையில் பணியாற்றி வரும் 30,000-40,000 போ் வரையில் வேலையினை இழக்கும் சூழல் உருவாகியுள்ளது. ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை இவ்வாறு ஏற்படுவது என்பது இயல்பானதே.

நிறுவனங்கள் வளா்ச்சி பாதையில் செல்லும்போது பணியாளா்களுக்கான செலவின் ஒரு பொருட்டாக தெரிவதில்லை. ஆனால், அது மந்த நிலையில் பயணிக்கும்போது உயா்மட்ட அளவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இதையடுத்தே, வேலை குறைப்பு நடவடிக்கைகளில் நிறுவனங்கள் இறங்கி விடுகின்றன.

செய்யும் தொழிலில் நிபுணத்துவம் பெற்றிருந்தால் வேலை இழப்போரில் 80 சதவீதம் பேருக்கும் மீண்டும் பணிவாய்ப்புகள் கிடைத்துவிடும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT