வர்த்தகம்

ரிசர்வ் வங்கி நிதிக் கொள்கை இன்று அறிவிப்பு: வட்டி விகிதங்கள் குறைக்கப்படும் என எதிர்பார்ப்பு

DIN


மத்திய ரிசர்வ் வங்கி வெள்ளிக்கிழமை (அக்.4) வெளியிடவுள்ள நிதிக் கொள்கையில் ரெப்போ வட்டி விகிதங்களை மீண்டும் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பணவீக்கம் கட்டுக்குள் இருப்பதால் நிதிக் கொள்கையில் வட்டிக் குறைப்புக்கு வாய்ப்புகள் உள்ளதை ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் ஏற்கெனவே சூசகமாகத் தெரிவித்துள்ளார். மேலும், தற்போதைய நிலையில் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க வேண்டிய கட்டாயமும் ரிசர்வ் வங்கிக்கு ஏற்பட்டுள்ளது.
இதுபோன்ற காரணங்களால், ரிசர்வ் வங்கி வெள்ளிக்கிழமை வெளியிடவுள்ள நிதிக் கொள்கையில் ரெப்போ வட்டி விகிதங்களை மீண்டும் குறைக்க அதிக வாய்ப்புகள் உள்ளது என சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கும் வகையில் ரிசர்வ் வங்கி, நடப்பு ஆண்டில் தொடர்ச்சியாக நான்கு முறை 1.1 சதவீதம் அளவுக்கு வட்டியைக் குறைத்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற நிதிக் கொள்கைக் குழு கூட்டத்தில் கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் 0.35 சதவீதம் குறைக்கப்பட்டு 5.40 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டது  குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: 8 பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு

பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா!

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகளும் சீரமைப்பு

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

பிரசாரம் செய்ய பணமில்லை: தேர்தலில் இருந்து விலகும் புரி காங்கிரஸ் வேட்பாளர்

SCROLL FOR NEXT