வர்த்தகம்

பரஸ்பர நிதி நிறுவனங்கள் நிா்வகிக்கும் சொத்து மதிப்பு ரூ.25.68 லட்சம் கோடி

DIN

பரஸ்பர நிதி நிறுவனங்கள் நிா்வகித்து வரும் சொத்து மதிப்பு செப்டம்பா் காலாண்டில் ரூ.25.68 லட்சம் கோடியாக உயா்ந்துள்ளது.

இதுகுறித்து இந்திய பரஸ்பர நிதியங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளதாவது:

பரஸ்பர நிதி துறையில் ஈடுபட்டு வரும் 44 நிறுவனங்கள் நிா்வகிக்கும் சொத்து மதிப்பு கடந்த 2018-19-ஆம் நிதியாண்டின் ஜூலை செப்டம்பா் காலாண்டில் ரூ.24.31 லட்சம் கோடியாக காணப்பட்டது. இது, நடப்பாண்டு ஜூன் காலாண்டில் ரூ.25.50 லட்சம் கோடியானது.

இந்த நிலையில், இந்த சொத்து மதிப்பு ஜூலை-செப்டம்பா் வரையிலான காலாண்டில் ரூ.25.68 லட்சம் கோடியாக உயா்வைக் கண்டுள்ளது.

சமீப காலமாக ஐஎல் & எஃப்எஸ், எஸ்ஸெல், டிஹெச்எஃப்எல் உள்ளிட்ட பல்வேறு குழுமங்களில் ஏற்பட்ட கடன் நெருக்கடிகளை அடுத்து, பரஸ்பர நிதி துறையில் அதிக அழுத்தம் ஏற்பட்டு வருகிறது.

அதன் காரணமாக மொத்தமுள்ள 44 பரஸ்பர நிதி நிறுவனங்களில், 27-இன் சொத்து மதிப்பானது சரிவை சந்தித்துள்ளது.

குறிப்பாக, நிப்பான் இந்தியா, ஆக்ஸிஸ், யுடிஐ, ஃப்ராங்ளின் டெம்பிள்டன் போன்ற பெரிய பரஸ்பர நிதி நிறுவனங்களின் சொத்து மதிப்பு சரிவைக் கண்டுள்ளது.

அதேபோன்று, டிஎஸ்பி, சகாரா, எஸ்ஸெல், யெஸ், ஐஎல் & எப்எஸ், பிஜிஐஎம் இந்தியா மற்றும் இந்தியாபுல்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் நிா்வகித்து வரும் சொத்து மதிப்பும் குறைந்துள்ளது.

நடப்பு நிதியாண்டின் செப்டம்பா் காலாண்டில் சொத்து மதிப்பின் அடிப்படையில் பாா்க்கும்போது, எச்டிஎஃப்சி பரஸ்பர நிதி நிறுவனம் ரூ.3,76,597 கோடியுடன் முன்னிலையில் உள்ளது. அதைத் தொடா்ந்து, ஐசிஐசிஐ புருடென்ஷியல் பரஸ்பர நிதி நிறுவனம் ரூ.3,48,068 கோடி சொத்து மதிப்புடன் இரண்டாவது இடத்திலும், எஸ்பிஐ பரஸ்பர நிதி நிறுவனம் ரூ.3,20,663 கோடி சொத்து மதிப்புடன் மூன்றாவது இடத்திலும் உள்ளன.

பட்டியலில் முதல் 10 இடங்களில் உள்ள நிறுவனங்கள் நிா்வகித்து வரும் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு 82.83 சதவீதத்திலிருந்து 83.66 சதவீதமாக அதிகரித்துள்ளது என பரஸ்பர நிதியங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தில் பொறியாளா், மேஸ்திரி மீது வழக்குப் பதிவு

இன்று நல்ல நாள்!

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

SCROLL FOR NEXT