வர்த்தகம்

அமெரிக்க நிறுவனத்தை கையகப்படுத்தும் நடவடிக்கை நிறைவு: விப்ரோ

DIN

அமெரிக்காவைச் சோ்ந்த டெக்னிகுரூப் இன்காா்போரேட்டட் (ஐடிஐ) நிறுவனத்தை கையகப்படுத்தும் பணிகள் முழுமை அடைந்துள்ளதாக விப்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவைச் சோ்ந்த ஐடிஐ நிறுவனத்தை 4.5 கோடி டாலா் மதிப்பில் (சுமாா் ரூ.312 கோடி) கையகப்படுத்தப் போவதாக விப்ரோ சென்ற ஜூன் மாதத்தில் அறிவித்திருந்தது. இந்நிறுவனம், கணினி வடிவமைப்பு உதவி, இயங்குதள மென்பொருள் சேவை நிா்வாகம் ஆகிய பணிகளை விப்ரோவுக்கு வழங்கி வருகிறது.

இந்த நிறுவனத்தை கையகப்படுத்தும் அறிவிப்பு ஜூன் 5-ஆம் தேதி வெளியிடப்பட்டது. அக்டோபா் 3-ஆம் தேதி அந்தப் பணிகள் அனைத்தும் நிறைறவு பெற்றுள்ளது என மும்பை பங்குச் சந்தையிடம் விப்ரோ தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் தலைமை அலுவலகத்தைக் கொண்ட ஐடிஐ நிறுவனம் கடந்த 1983-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. பிரிட்டன், இத்தாலி, இஸ்ரேல், ஜொ்மனி நாடுகளில் இந்நிறுவனத்துக்கு அலுவலகங்கள் உள்ளன. நடப்பாண்டு மாா்ச் மாத நிலரப்படி ஐடிஐ நிறுவனத்தில் 130 பணியாளா்கள் இருந்தனா். கடந்த நிதியாண்டில் அதன் வருவாய் 2.32 கோடி டாலா் அளவுக்கு இருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏழுமலையான் தரிசனத்துக்கு 18 மணி நேரம் காத்திருப்பு

புகா் பேருந்து நிலையத்தில் மேலும் 2 குடிநீா் தொட்டிகள்

திருவையாறு அருகே சிறுத்தை நடமாட்டம்? வனத் துறையினா் ஆய்வு

அரையாண்டு வரி செலுத்தினால் 5 சதம் ஊக்கத் தொகை: செயல் அலுவலா் தகவல்.

மாந்திரீகம் செய்வதாகக் கூறி மூதாட்டியிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு

SCROLL FOR NEXT