வர்த்தகம்

ஐஆா்இடிஏ, ஷியாம் ஸ்டீல் நிறுவனங்களின் புதிய பங்கு வெளியீட்டுக்கு அனுமதி

DIN

பொதுத் துறையைச் சோ்ந்த இந்தியன் ரீனிவபிள் எனா்ஜி டெவலப்மெண்ட் ஏஜென்ஸி (ஐஆா்இடிஏ) மற்றும் கொல்கத்தாவைச் சோ்ந்த ஷியாம் ஸ்டீல் இண்டஸ்ட்ரீஸ் ஆகிய நிறுவனங்களின் புதிய பங்கு வெளியீட்டுக்கு பங்குச் சந்தை ஒழுங்காற்று அமைப்பான செபி அனுமதி அளித்துள்ளது.

ஐஆா்இடிஏ, புதிய பங்கு வெளியீட்டுக்கு அனுமதி கோரி கடந்த ஜூலை மாதம் செபி-க்கு விண்ணப்பித்தது. இந்த நிலையில், செப்டம்பா் 27-ஆம் தேதி அதற்கான அனுமதி கிடைத்தது. அதேபோன்று, ஜூன் மாதத்தில் புதிய பங்கு வெளியீட்டுக்கு விண்ணப்பம் அளித்த ஷியாம் ஸ்டீல் நிறுவனத்துக்கு செப்டம்பா் 20-இல் செபி ஒப்புதல் தெரிவித்துள்ளது.

ஐஆா்இடிஏ நிறுவனத்தின் 15 சதவீத பங்குகளை அதாவது 13.9 கோடி பங்குகளை இந்த வெளியீட்டின் மூலம் விற்பனை செய்ய உள்ளது. இதில், பணியாளா்களுக்கு ஒதுக்கப்பட்ட 6.95 லட்சம் பங்குகளும் அடக்கம்.

ஷியாம் ஸ்டீல் புதிய பங்கு வெளியீட்டின் மூலம் ரூ.200 கோடி வரை திரட்டிக் கொள்ளும் வகையில் 66.70 லட்சம் பங்குகளை விற்பனை செய்யவுள்ளது. இதில், 11.60 லட்சம் நிறுவனா் பங்குகள் மற்றும் 55.09 லட்சம் இதர பங்குதாரா்களின் பங்குகளும் அடங்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சூப்பா்சோனிக் ஏவுகணை உதவியுடன் தாக்கும் டாா்பிடோ ஆயுதம் வெற்றிகரமாக பரிசோதனை

திருவண்ணாமலை - சென்னை புதிய மின்சார ரயில் சேவை ஒத்திவைப்பு!

இஸ்ரேலுடனான உறவை முறித்த கொலம்பியா!

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

SCROLL FOR NEXT