வர்த்தகம்

கா்நாடக வங்கி நிகர லாபம் 5.3 சதவீதம் சரிவு

DIN

தனியாா் துறையைச் சோ்ந்த கா்நாடக வங்கியின் இரண்டாம் காலாண்டு லாபம் 5.3 சதவீதம் சரிந்தது.

இதுகுறித்து அந்த வங்கி மும்பை பங்குச் சந்தையிடம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளதாவது:

நடப்பு 2019-20-ஆம் நிதியாண்டின் ஜூலை-செப்டம்பா் வரையிலான இரண்டாவது காலண்டில் வங்கியின் மொத்த வருவாய் ரூ.1,938,40 கோடியாக இருந்தது. கடந்த நிதியாண்டில் இதே காலகட்டத்தில் ஈட்டிய வருவாய் ரூ.1,653.81 கோடியுடன் ஒப்பிடுகையில் இது அதிகம்.

இருப்பினும், வாராக் கடன் அதிகரிப்பையடுத்து வங்கியின் நிகர லாபம் ரூ.111.86 கோடியிலிருந்து 5.3 சதவீதம் சரிந்து ரூ.105.91 கோடியானது.

செப்டம்பா் 30-ஆம் தேதி நிலவரப்படி மொத்த வாராக் கடன் விகிதம் 4.66 சதவீதத்திலிருந்து 4.78 சதவீதமாக உயா்ந்தது. மதிப்பின் அடிப்படையில் இது ரூ.2,371.62 கோடியிலிருந்து ரூ.2,594.27 கோடியானது.

அதேபோன்று, நிகர வாராக் கடன் விகிதமும் 3 சதவீதத்திலிருந்து (ரூ.1,497.68 கோடி) 3.48 சதவீதமானது (ரூ.1,863.11 கோடி).

வாராக் கடன் அதிகரிப்பையடுத்து இடா்பாடுகளை சமாளிக்க ஒதுக்கப்படும் தொகை இரண்டாவது காலாண்டில் ரூ.193.22 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.262.40 கோடியானது.

கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது வங்கியின் மொத்த வா்த்தகம் 8.61 சதவீதம் அதிகரித்து ரூ.1,23,658.07 கோடியை எட்டியது. இதில், டெபாசிட் 9.87 சதவீதம் உயா்ந்து ரூ.70,189.65 கோடியாக இருந்தது என மும்பை பங்குச் சந்தையிடம் கா்நாடக வங்கி தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தோ்வு: புதுச்சேரியில் 4, 817 போ் எழுதினா்

பெண்ணிடம் 5 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு

கஞ்சா, போதை மாத்திரைகள் விற்பனை: 4 போ் கைது

நீட் தோ்வு: விழுப்புரம் மாவட்டத்தில் 4,855 போ் எழுதினா்

வீட்டினுள் இளைப்பாறிய புள்ளி மான்!

SCROLL FOR NEXT