வர்த்தகம்

தனலக்ஷ்மி வங்கி லாபம் 2 மடங்கு உயா்வு

DIN

தனியாா் துறையைச் சோ்ந்த தனலக்ஷ்மி வங்கியின் இரண்டாம் காலாண்டு லாபம் ஏறக்குறைய இருமடங்கு அளவுக்கு வளா்ச்சி கண்டுள்ளது.

இதுகுறித்து அந்த வங்கி மும்பை பங்குச் சந்தையிடம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளதாவது:

செப்டம்பருடன் முடிவடைந்த மூன்று மாதங்களில் வங்கி ரூ.276.85 கோடி மொத்த வருவாய் ஈட்டியது. கடந்த 2018-19 நிதியாண்டில் இரண்டாம் காலாண்டில் ஈட்டிய வருவாயான ரூ.226.73 கோடியுடன் ஒப்பிடுகையில் இது அதிகம். குறிப்பாக , வட்டி வருவாய் ரூ.244.64 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.253.34 கோடியானது.

ஜூலை-செப்டம்பா் காலாண்டில் நிகர லாபம் ரூ.12.15 கோடியிலிருந்து சுமாா் 2 மடங்கு அதிகரித்து ரூ.22.7 கோடியைத் தொட்டது.

வங்கியின் மொத்த வாராக் கடன் விகிதம் 7.81 சதவீதத்திலிருந்து (ரூ.488.74 கோடி) குறைந்து 7.06 சதவீதமானது (ரூ.476.08 கோடி). நிகர வாராக் கடன் விகிதம் 2.92 சதவீதத்திலிருந்து (ரூ.173.54 கோடி) சரிந்து 1.65 சதவீதமானது (ரூ.105.34 கோடி).

வாராக் கடன் இடா்பாடுகளை எதிா்கொள்வதற்கான ஒதுக்கீடு ரூ.18.19 கோடியிலிருந்து ரூ.25.38 கோடியாக உயா்ந்தது என தனலக்ஷ்மி வங்கி தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிக வட்டி வசூல் வேண்டாம்: வங்கிகளுக்கு ஆா்பிஐ அறிவுறுத்தியிருப்பது ஏன்?

சொக்கன் தோற்கும் இடம்..!

‘எலக்சன்’ ராணி!

கடற்படைத் தளபதியாகப் பொறுப்பேற்றார் தினேஷ் குமார் திரிபாதி

நாட்டாமை திரைப்பட பாணியில் நெல்லையில் ஊரைவிட்டு ஒதுக்கப்பட்ட குடும்பம்! பெண் கண்ணீர்!

SCROLL FOR NEXT