வர்த்தகம்

ஐடிபிஐ வங்கிக்கு ரூ.9,300 கோடி மூலதனம்: மத்திய அரசு ஒப்புதல்

DIN


ஐடிபிஐ வங்கியின் அடிப்படை மூலதனத்தை அதிகரிப்பதற்காக, ரூ. 9000 கோடி மூலதனத்தை அளிக்க மத்திய அரசு இன்று (செவ்வாய்கிழமை) ஒப்புதல் அளித்துள்ளது.   

இதுகுறித்து ஊடகங்களிடம் பேசிய மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர், 

"ஐடிபிஐ வங்கி, லாபத்தை நோக்கி திரும்புவதற்கு இந்த நடவடிக்கை உதவும். வழக்கமான முறையில் கடன் வழங்கும் செயல்களையும் இது மேம்படுத்தும். இதன்மூலம், அரசும் தனது முதலீட்டை திரும்ப மீட்டெடுப்பதற்கான வாய்ப்பும் உருவாகிறது. 

மொத்தமுள்ள இந்த ரூ. 9300 கோடியில் 51 சதவீதத்தை (ரூ. 4743 கோடி) எல்ஐசி கவனித்துக் கொள்கிறது. மீதமுள்ள 49 சதவீதத்தை (ரூ. 4557 கோடி) அரசு ஒரே தவணையாக வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ஐடிபிஐ வங்கியில் எல்ஐசியின் பங்கு விகிதம் கடந்த ஜனவரி மாதம் 51 ஆக உயர்ந்ததையடுத்து, அரசின் பங்கு 86 சதவீதத்தில் இருந்து 46 ஆக குறைந்தது.

இதனால், ஐடிபிஐ வங்கி தனது மூலதனத்தை தாமாக அதிகரித்துக்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது" என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

SCROLL FOR NEXT