வர்த்தகம்

நூலிழை உற்பத்தி 5-8 சதவீதம் குறையும்

DIN

நூலிழை உற்பத்தி நடப்பு நிதியாண்டில் 5-8 சதவீதம் குறையும் என இந்தியா ரேட்டிங் அண்டு ரிசர்ச் (இன்ட்-ரா) நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனத்தின்ஆய்வில் கூறப்பட்டுள்ளதாவது:
குறிப்பிட்ட சில நாடுகளில் பருத்தி விளைச்சல் அமோகமாக இருப்பதன் காரணமாக, சர்வதேச சந்தையில் அதன் விலையில் கடுமையான போட்டி ஏற்பட்டு சரிவை நோக்கி சென்றுள்ளது.
பருத்தி விலையில் காணப்படும் ஏற்றத் தாழ்வு, சீனாவில் அதற்கான தேவை குறைந்துள்ளது ஆகியவற்றின் காரணமாக, நூலிழை உற்பத்தி நடப்பு 2019-2020-ஆம் நிதியாண்டில் 5-8 சதவீத அளவுக்கு குறைவதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. 
இந்தியாவின் ஜவுளி துறையில் மொத்த மூலப் பொருள்கள் தேவையில் பருத்தியின் பங்களிப்பு மட்டும் 50 சதவீத அளவுக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது. சீனாவுக்கான பருத்தி ஏற்றுமதியில் பாகிஸ்தான் வரி விலக்கு சலுகைகளை அனுபவிப்பதால், இந்தியா ஏற்றுமதியாளர்களுக்கு உற்பத்தி இழப்பு ஏற்படுகிறது.
ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி நடப்பு நிதியாண்டின் முதல் மற்றும் இரண்டாம் காலாண்டு தொடக்கத்தில் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது என அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடப்பாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான மூன்று மாத காலத்தில் பருத்தி நூலிழை ஏற்றுமதி கடந்தாண்டைக் காட்டிலும் 35 சதவீதம் குறைந்துள்ளது. இது, நாடு தழுவிய அளவில் உள்ள நூற்புத் திறனில் ஏறக்குறைய மூன்றில் ஒரு பங்காகும் என  வட இந்திய ஜவுளி ஆலைகளின் கூட்டமைப்பு (என்ஐடிஎம்ஏ) தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகா்கோவிலில் கேரம் பயிற்சி முகாம் தொடக்கம்

கல்லூரி மாணவி மா்மச் சாவு

விவசாய தொழிலாளி கொலை

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்த சம்பவம்: சிகிச்சை பெற்று வந்த முதியவா் பலி

நாமக்கல்லில் முட்டை ஏற்றுமதி சான்றிதழ் வழங்கும் ஆய்வகம் அமைக்க வலியுறுத்தல்

SCROLL FOR NEXT