வர்த்தகம்

கனிமங்கள் உற்பத்தியை 200% அதிகரிக்க திட்டம்

DIN


கனிமங்கள் உற்பத்தியை அடுத்த 7 ஆண்டுகளில் 200 சதவீதம் அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி  வியாழக்கிழமை தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியுள்ளதாவது: சுரங்கத் துறையைப் பொருத்தவரையில் மத்திய அரசு பல்வேறு சீரமைப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இத்துறையில் வெளிப்படைத்தன்மையுடன் கூடிய போட்டி ஏல செயல் முறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும் கனிம வள துறையில் ஆய்வுப் பணிகளை முடுக்கிவிடுவதற்காக, தேசிய கனிம ஆய்வு அமைப்பும் (என்எம்இடி) ரூ.1,500 கோடி நிதியத்தில்  உருவாக்கப்படவுள்ளது. இதுபோன்ற நடவடிக்கைகள் அடுத்த 7 ஆண்டுகளில் கனிமங்கள் உற்பத்தியை 200 சதவீதம் அதிகரிக்கும். பிரதமரின் இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தில் சுரங்கத் துறையானது மிக முக்கிய பங்கை வகிக்கிறது என்றர் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ட்ரெண்டிங் ஆடையில் குஷி கபூர் - புகைப்படங்கள்

இது காங்கிரஸுக்கான நேரம்... ஒடிசாவில் ராகுல் பேச்சு

சிஎஸ்கே பேட்டிங்; வெற்றிப் பாதைக்கு திரும்புமா?

சேலையில் மிளிரும் கீர்த்தி சுரேஷ் - புகைப்படங்கள்

குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தி ஆர்சிபி அபார வெற்றி!

SCROLL FOR NEXT