வர்த்தகம்

பி.எச்.இ.எல் நிறுவனம் 100 சதவீத ஈவுத்தொகை அறிவிப்பு

DIN


பொதுத் துறையைச் சேர்ந்த பி.எச்.இ.எல். நிறுவனம், கடந்த நிதியாண்டுக்கு 100 சதவீத ஈவுத் தொகையை அறிவித்துள்ளது. 
இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
கடந்த  40 ஆண்டுகளுக்கும் மேலாக நிறுவனத்தின் செயல்பாடு மிகச் சிறப்பான அளவில் இருந்து வருகிறது. அதன் காரணமாகவே, பங்குதாரர்களுக்கு ஈவுத்தொகை வழங்கும்  நிறுவனத்தின் நடவடிக்கையில் குறைகளைச் சுட்டிக்காட்ட முடியாத அளவுக்கு உள்ளது.
வியாழக்கிழமை நடைபெற்ற ஆண்டு பொதுக் குழு கூட்டத்தில் கடந்த 2018-19 நிதியாண்டுக்கு கூடுதலாக 60 சதவீத இறுதி ஈவுத்தொகை வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. 
ஏற்கெனவே வழங்கப்பட்ட 40 சதவீத இடைக்கால ஈவுத் தொகையையும் (மதிப்பின் அடிப்படையில் இது ரூ.279 கோடி) சேர்த்து கடந்த  நிதியாண்டுக்கு 100 சதவீத ஈவுத் தொகை பங்குதாரர்களுக்கு வழங்கப்படவுள்ளது என பி.எச்.இ.எல் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யாரோ இவர் யாரோ? அந்த ஓவியாவேதான்...

பிங்க் ரோஸ்...ஸ்ரீதேவி

சிசோடியா ஜாமீன் மனு: சிபிஐ, அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவு!

‘ஆவேஷம்’ பட டிரெண்டிங்கில் இணைந்த பாட் கம்மின்ஸ்!

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் 6 இல் வெளியாகும்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

SCROLL FOR NEXT