வர்த்தகம்

தங்கம் பவுனுக்கு ரூ.152 உயர்வு

DIN

சென்னையில் சனிக்கிழமை ஆபரணத் தங்கம் பவுனுக்கு ரூ.152 உயர்ந்து, ரூ.28,944-க்கு விற்பனை செய்யப்பட்டது. 

சர்வதேச பொருளாதாரச் சூழல், உலகச் சந்தையில் தங்கத்தின் மதிப்பு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் விலை நிர்ணயிக்கப்படுகிறது. பல்வேறு காரணங்களால், தங்கத்தின் விலை கடந்த புதன்கிழமை ரூ.29 ஆயிரத்தை தாண்டியது. அதன்பிறகு, தங்கத்தின் விலை ஏற்றஇறக்கங்களை சந்தித்து வருகிறது.

இந்நிலையில், ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ.152 உயர்ந்து, ரூ.28,944-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.19 உயர்ந்து, ரூ.3,618-க்கு விற்பனையானது. அதேநேரத்தில், வெள்ளி விலை குறைந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு 20  பைசா குறைந்து ரூ.48.80 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.200 குறைந்து, ரூ.48,800 ஆகவும் இருந்தது.

சனிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):

1 கிராம் தங்கம்    3,618
1 பவுன் தங்கம்    28,944
1 கிராம் வெள்ளி    48.80
1 கிலோ வெள்ளி    48,800

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆஸ்திரியாவில் பிரியா பவானி சங்கர்!

துணைக் கேப்டன் பதவிக்கு ஹார்திக் பாண்டியா தகுதியானவரா? முன்னாள் வீரர் பதில்!

மாதனூரில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை

ஸ்ரீதேவியின் புதல்வி!

தைவானில் 4.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!

SCROLL FOR NEXT