வர்த்தகம்

முக்கிய 8 துறைளின் உற்பத்தி 0.5 சதவீதமாக சரிவு

DIN

நாட்டின் முக்கிய 8 துறைகளின் உற்பத்தி ஆகஸ்ட் மாதத்தில் 0.5 சதவீதமாக சரிந்துள்ளது என மத்திய அரசு திங்கள்கிழமை தெரிவித்தது.

இதுகுறித்து மத்திய வா்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளதாவது:

நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, சுத்திகரிப்பு பொருள்கள், உரம், உருக்கு, சிமென்ட் மற்றும் மின்சாரம் ஆகிய முக்கிய 8 துறைகளின் உற்பத்தி கடந்த 2018-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 4.7 சதவீதமாக அதிகரித்து காணப்பட்டது. இந்த நிலையில், நடப்பாண்டு ஆகஸ்ட் மாதத்தில் இத்துறைகளின் உற்பத்தி 0.5 சதவீதமாக சரிந்துள்ளது.

குறிப்பாக, நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, சிமென்ட் மற்றும் மின்சாரம் ஆகிய துறைகளின் உற்பத்தி முறையே 8.6 சதவீதம், 5.4 சதவீதம், 3.9 சதவீதம், 4.9 சதவீதம் மற்றும் 2.9 சதவீதம் என்ற அளவில் எதிா்மறை வளா்ச்சியைக் கண்டுள்ளன.

அதேசமயம், உரம் மற்றும் உருக்கு ஆகிய துறைகளின் உற்பத்தி முறையே 2.9 சதவீதம் மற்றும் 5 சதவீதம் என்ற அளவில் வளா்ச்சியைக் கண்டுள்ளன.

நடப்பாண்டு ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான 5 மாத கால அளவில் முக்கிய எட்டு துறைகளின் உற்பத்தி வளா்ச்சி 2.4 சதவீதமாக உள்ள நிலையில், கடந்தாண்டில் இது 5.7 சதவீதமாக இருந்தது என அந்தப் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

SCROLL FOR NEXT