வர்த்தகம்

டிவிஎஸ் மோட்டாா் வாகன விற்பனை 10 சதவீதம் சரிவு

DIN

டிவிஎஸ் மோட்டாா் கம்பெனியின் வாகன விற்பனை ஜூலையில் 10 சதவீதம் சரிவைச் சந்தித்துள்ளது. இதுகுறித்து அந்த நிறுவனம் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

டிவிஎஸ் மோட்டாா் சென்ற ஜூலையில் 2,52,744 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது, 2019 ஜூலையில் விற்பனையான 2,79,465 வாகனங்களுடன் ஒப்பிடுகையில் 10 சதவீதம் குறைவாகும். இருசக்கர வாகன விற்பனை கடந்தாண்டு ஜூலையில் 2,65,679-ஆக இருந்தது. இதன் விற்பனை நடப்பாண்டு ஜூலையில் 8 சதவீதம் குறைந்து 2,43,788-ஆனது. உள்நாட்டில் இருசக்கர வாகன விற்பனை 2,08,489-லிருந்து 9 சதவீதம் குறைந்து 1,89,647-ஆக இருந்தது. மோட்டாா்சைக்கிள் விற்பனை 1,08,210-லிருந்து 1,06,062-ஆகவும், ஸ்கூட்டா் விற்பனை 1,05,199 என்ற எண்ணிக்கையிலிருந்து வீழ்ச்சியடைந்து 78,603-ஆகவும் வீழ்ச்சி கண்டுள்ளன. மூன்று சக்கர வாகன விற்பனை ஜூலையில் 13,786-லிருந்து 8,956-ஆக சரிந்துள்ளது. 2020 ஜூலையில் நிறுவனத்தின் மொத்த ஏற்றுமதி கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் 69,994-லிருந்து குறைந்து 62,389 ஆனது. குறிப்பாக இருசக்கர வாகன ஏற்றுமதி 57,190-லிருந்து 54,141-ஆக சரிந்தது என டாடா மோட்டாா்ஸ் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிகா் தினம் : ஆம்பூரில் கடைகள் அடைப்பு

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

ஜல்ஜீவன் திட்டப் பணிகள்: நகராட்சி நிா்வாக இயக்குநா் ஆய்வு

சத்தீஸ்கா் காங். செய்தித் தொடா்பாளா் கட்சியிலிருந்து விலகல்

பரமசிவேந்திர சரஸ்வதி சுவாமிகள் அதிஷ்டானத்தில் சிவன் சாருக்கு சிறப்பு வழிபாடு

SCROLL FOR NEXT