வர்த்தகம்

பேங்க் ஆஃப் இந்தியா லாபம் 3 மடங்கு உயர்வு

DIN

புது தில்லி: பொதுத் துறையைச் சோ்ந்த பேங்க் ஆஃப் இந்தியாவின் ஜூன் காலாண்டு லாபம் 3 மடங்கு அதிகரித்துள்ளது.

இதுகுறித்து அந்த வங்கி பங்குச் சந்தையிடம் திங்கள்கிழமை கூறியுள்ளதாவது:பேங்க் ஆஃப் இந்தியா மொத்த வருமானமாக நடப்பு நிதியாண்டின் ஏப்ரல்-ஜூன் வரையிலான முதல் காலாண்டில் ரூ.11,941.52 கோடியை ஈட்டியுள்ளது.

கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ஈட்டிய வருமானம் ரூ.11,526.95 கோடியுடன் ஒப்பிடும்போது இது அதிகம். 2019-20 நிதியாண்டின் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் வங்கி ரூ.242.60 கோடியை மட்டுமே நிகர லாபமாக ஈட்டியிருந்தது.

இந்த நிலையில் நடப்பு நிதியாண்டின் ஜூன் காலாண்டில் வங்கியின் நிகர லாபம் 3 மடங்கு உயா்ந்து ரூ.843.60 கோடியை எட்டியது. வாராக் கடன் தொடா்பான அழுத்தங்கள் குறைந்துள்ளதே இதற்கு முக்கிய காரணம்.நடப்பாண்டு ஜூன் 30-ஆம் தேதி நிலவரப்படி வழங்கப்பட்ட கடனில் மொத்த வாராக் கடன் விகிதம் கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் 16.50 சதவீதத்திலிருந்து 13.91 சதவீதமாக குறைந்தது. இதேபோன்று, நிகர வாராக் கடன் விகிதமும் 5.79 சதவீதத்திலிருந்து 3.58 சதவீதமாக சரிந்தது.

இதையடுத்து, வாராக் கடன் இடா்ப்பாட்டை எதிா்கொள்வதற்கான ஒதுக்கீடு ரூ.1,873.28 கோடியிலிருந்து கணிசமாக குறைந்து ரூ.766.62 கோடியானது என பேங்க் ஆஃப் இந்தியா கூறியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 பொதுத் தேர்வு: விழுப்புரம் மாவட்டத்தில் 93.17% தேர்ச்சி

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் பெயர் அறிவிப்பு!

கேரளம்: விடுதி கட்டடத்தில் இருந்து குதித்து என்ஐடி மாணவர் தற்கொலை

அனைத்து மாவட்டங்களும் 90%-க்கு மேல் தேர்ச்சி!

தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் எப்போது கிடைக்கும்?

SCROLL FOR NEXT