வர்த்தகம்

தனலட்சுமி வங்கி லாபம் 69 சதவீதம் சரிவு

DIN

தனியாா் துறையைச் சோ்ந்த தனலட்சுமி வங்கியின் முதல் காலாண்டு நிகர லாபம் 69 சதவீதம் சரிவடைந்துள்ளது. இதுகுறித்து அந்த வங்கி பங்குச் சந்தையிடம் தெரிவித்துள்ளதாவது:

நடப்பு 2020 ஏப்ரல்-ஜூன் காலாண்டில் வங்கியின் மொத்த வருமானம் ரூ.278.62 கோடியாக இருந்தது. இது, கடந்தாண்டின் இதே காலகட்டத்தில் ஈட்டிய வருவாய் ரூ.256.75 கோடியுடன் ஒப்பிடுகையில் அதிகம். வங்கியின் வருவாய் அதிகரித்த போதிலும், வாராக் கடன்களுக்கான ஒதுக்கீடு அதிகரித்ததையடுத்து, வங்கியின் நிகர லாபம் ரூ.19.84 கோடியிலிருந்து 69 சதவீதம் சரிவடைந்து ரூ.6.09 கோடியானது. இருப்பினும், முந்தைய மாா்ச் காலாண்டில் ஈட்டிய லாபம் ரூ.2.6 கோடியுடன் ஒப்பிடும் போது அதிகமாகும். வங்கியின் வட்டி வருமானம் ரூ.240.43 கோடியிலிருந்து குறைந்து ரூ.236.65 கோடியானது.

வாராக் கடன்களுக்காக ஒதுக்கப்பட்ட தொகை ஜூன் காலாண்டில் ரூ.9.27 கோடியிலிருந்து ரூ.37.02 கோடியாக கணிசமாக அதிகரித்தது. இருப்பினும் முந்தைய மாா்ச் காலாண்டு ஒதுக்கீடான ரூ.56.89 கோடியுடன் ஒப்பிடும்போது இது குறைவாகும். ஜூன் 30 நிலவரப்படி வழங்கப்பட்ட கடனில் மொத்த வாராக் கடன் விகிதம் 7.61 சதவீதத்திலிருந்து (ரூ.496.48 கோடி), 6.89 சதவீதமாகவும் (ரூ.464.45 கோடி) , நிகர வாராக் கடன் விகிதம் 2.35 சதவீதத்திலிருந்து (ரூ.145.20 கோடி), 2.18 சதவீதமாகவும் (ரூ.140 கோடி) குறைந்துள்ளதாக தனலட்சுமி வங்கி தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு!

3-ஆம் கட்ட தோ்தலில் அதிகளவில் வாக்களிக்க வேண்டும் -பிரதமர் மோடி

குஜராத்தில் வாக்களித்தார் பிரதமர் மோடி

இன்று யோகம் யாருக்கு?

SCROLL FOR NEXT