வர்த்தகம்

இந்தியாவின் நிலக்கரி இறக்குமதி 43.2 சதவீதம் சரிவு

DIN

இந்தியாவின் நிலக்கரி இறக்குமதிகடந்த ஜூலையில் 43.2 சதவீதம் சரிவடைந்துள்ளது. இதுகுறித்து புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:

ஆலைகள் மற்றும் துறைமுகங்களில் அதிக கையிருப்பு காரணமாக, நடப்பாண்டு ஜூலையில் நாட்டின் நிலக்கரி இறக்குமதி 42 சதவீதம் குறைந்து 1.11 கோடி டன்னாக இருந்தது. கடந்த 2019-ஆம் ஆண்டு ஜூலையில் நிலக்கரி இறக்குமதியானது 1.96 கோடி டன்னாக இருந்தது. நடப்பாண்டு ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான நான்கு மாத காலத்தில் மொத்தம் 5.72 கோடி டன் அளவுக்கு நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

இது, 2019 ஏப்ரல்-ஜூலை காலகட்டத்தில் இறக்குமதி அளவான 8.91 கோடி டன் நிலக்கரியுடன் ஒப்பிடுகையில் 35.76 சதவீதம் குறைவாகும். ஏப்ரல்-ஜூலை காலகட்டத்தில் கோக்கிங் கோல் இறக்குமதியானது 1.77 கோடி டன்னிலிருந்து 1.06 கோடி டன்னாக குறைந்துள்ளது என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. உள்நாட்டில் நிலக்கரி உற்பத்தியில் 80 சதவீத பங்களிப்பை பொதுத் துறை நிறுவனமான கோல் இந்தியா வழங்கி வருகிறது. 2020-21 நிதியாண்டில் 10 கோடி டன் நிலக்கரி இறக்குமதியை ஈடு செய்யும் வகையில் இந்நிறுவனம் உள்நாட்டில் உற்பத்தியை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. நடப்பாண்டு மாா்ச் 31-ஆம் தேதி நிலவரப்படி நிலக்கரி கையிருப்பு 7.46 கோடி டன்னாக இருந்தது. கடந்த 2019 மாா்ச் 31-இல் கையிருப்பு 5.41 கோடி டன்னாக காணப்பட்டது என புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4,660 காலிப் பணியிடங்கள்: மே 14-க்குள் விண்ணப்பிக்கலாம்

இன்று நீட் தோ்வு: 11 மையங்களில் 6,120 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனா்

வணிகா் தினம்: தமிழகத்தில் இன்று கடைகள் இயங்காது

அந்நியச் செலாவணி கையிருப்பு 63,792 கோடி டாலராகக் குறைவு

கோடை வெயில் தாக்கம் அதிகரிப்பு: வேளாங்கண்ணியில் பக்தா்களுக்கு சிறப்பு வசதிகள்

SCROLL FOR NEXT