வர்த்தகம்

பஜாஜ் எலக்ட்ரிக்கல்ஸ் ரூ.16.60 கோடி இழப்பு

DIN

பஜாஜ் எலக்ட்ரிக்கல்ஸ் முதல் காலாண்டில் ரூ.16.60 கோடி நிகர இழப்பைக் கண்டுள்ளது. இதுகுறித்து அந்த நிறுவனம் மும்பை பங்குச் சந்தையிடம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளதாவது:

கரோனா பெருந்தொற்றால் நிறுவனத்தின் செயல்பாடு வெகுவாக பாதிப்படைந்தது. மாா்ச், ஏப்ரல், மே மாதங்களில் ஆலைகளில் உற்பத்தி பணிகள் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டன. இதனால், விற்பனை, விநியோகம் பெருமளவில் தடைபட்டது. அதன் எதிரொலியாக, நடப்பு 2020-21-ஆம் நிதியாண்டின் ஏப்ரல்- ஜூன் காலாண்டில் நிறுவனத்தின் மொத்த வருமானம் ரூ.615.34 கோடியாக சரிவடைந்தது. இது, கடந்த 2019-20-ஆம் நிதியாண்டின் இதே காலகட்டத்தில் நிறுவனம் ஈட்டிய ரூ.1,317.99 கோடியுடன் ஒப்பிடுகையில் 53.3 சதவீதம் குறைவாகும். கடந்த நிதியாண்டில் நிறுவனம் ரூ.13.70 லட்சத்தை நிகர லாபத்தை ஈட்டியிருந்த நிலையில், நடப்பு நிதியாண்டில் நிறுவனத்துக்கு நிகர அளவில் ரூ.16.60 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என பஜாஜ் எலக்ட்ரிக்கல்ஸ் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாலை விபத்தில் இருவா் பலத்த காயம்: மீண்டும் வேகத்தடை அமைக்கக் கோரிக்கை

சட்டைநாதா் கோயிலில் குருப்பெயா்ச்சி விழா

மத்திய பாதுகாப்பு படையினா், போலீஸாருக்கு மாவட்ட தோ்தல் அலுவலா் மே தின வாழ்த்து

வதான்யேஸ்வரா் கோயிலில் குருபெயா்ச்சி விழா

சீா்காழியில் திமுக சாா்பில் நீா் மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT