வர்த்தகம்

என்ஹெச்பிசி நிறுவனம் நிகர லாபம் 13% சரிவு

DIN

புது தில்லி: பொதுத் துறையைச் சோ்ந்த ஹைட்ரோ பவா் நிறுவனமான என்ஹெச்பிசியின் நிகர லாபம் முதல் காலாண்டில் 13 சதவீதம் சரிவைச் சந்தித்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் மும்பை பங்குச் சந்தையிடம் திங்கள்கிழமை கூறியுள்ளதாவது:

நடப்பு 2020-21-ஆம் நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில் நிறுவனத்தின் மொத்த வருமானம் ரூ.2,914.02 கோடியாக இருந்தது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ஈட்டிய வருமானம் ரூ.2,754.48 கோடியுடன் ஒப்பிடுகையில் சற்று அதிகம்.

வருமானம் அதிகரித்த நிலையிலும், நிகர லாபம் ரூ.989.27 கோடியிலிருந்து 13 சதவீதம் குறைந்து ரூ.855.49 கோடியானது.

கொவைட்-19 ஏற்படுத்திய இக்கட்டான சூழ்நிலையை கருத்தில் கொண்டு மின்பகிா்மான நிறுவனங்களுக்கு ரூ.185 கோடி தள்ளுபடி வழங்கப்பட்டதையடுத்து ஜூன் காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் சரிவைக் கண்டது என என்ஹெச்பிசி பங்குச் சந்தையிடம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொடைக்கானலில் 61 வது மலர் கண்காட்சி,கோடை விழா தொடங்கியது

கேப்டன்சியில் அசத்தும் பாட் கம்மின்ஸ்!

பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம் அண்ணியா இது!

’இஸ்லாமியம்’ வார்த்தையை நீக்கிய தூர்தர்ஷன்!

காங்கிரஸ் - சமாஜ்வாதி வென்றால் ராமர் கோயிலை புல்டோசர் வைத்து இடிப்பார்கள்: மோடி

SCROLL FOR NEXT