வர்த்தகம்

இந்தியா சிமென்ட்ஸ் இழப்பு ரூ.8.79 கோடி

DIN

இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனம் மூன்றாவது காலாண்டில் ரூ.8.79 கோடி நிகர இழப்பை சந்தித்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் பங்குச் சந்தையிடம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளதாவது:

நடப்பு 2019-20-ஆம் நிதியாண்டின் அக்டோபா்-டிசம்பா் வரையிலான மூன்றாவது காலாண்டில் நிறுவனம் செயல்பாடுகள் மூலம் ரூ.1,244.28 கோடி வருவாய் ஈட்டியது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ஈட்டிய வருவாய் ரூ.1,244.28 கோடியுடன் ஒப்பிடுகையில் 7.90 சதவீதம் குறைவாகும்.

கடந்த நிதியாண்டின் டிசம்பா் காலாண்டில் ரூ.4.32 கோடியாக காணப்பட்ட நிகர இழப்பானது நடப்பு நிதியாண்டில் 8.79 கோடியாக அதிகரித்தது.

நிறுவனத்தின் மொத்த செலவினம் மதிப்பீட்டு காலாண்டில் ரூ.1,363.99 கோடியிலிருந்து 7.24 சதவீதம் குறைந்து ரூ.1,265.13 கோடியாக இருந்தது என இந்தியா சிமென்ட்ஸ் பங்குச் சந்தையிடம் கூறியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அஞ்சலி.. அஞ்சலி..!

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு வாகனங்கள் மீது துப்பாக்கிச்சூடு: 5 வீரர்கள் காயம்

அரசுப் பேருந்துகளில் உதகை வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் அப்டேட்!

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT