வர்த்தகம்

சிண்டிகேட் வங்கி லாபம் ரூ.434.82 கோடி

DIN

மத்திய அரசுக்கு சொந்தமான சிண்டிகேட் வங்கியின் மூன்றாம் காலாண்டு லாபம் பன்மடங்கு அதிகரித்து ரூ.434.82 கோடியைத் தொட்டுள்ளது.

இதுகுறித்து அந்த வங்கி பங்கு சந்தையிடம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளதாவது:

நடப்பு நிதியாண்டின் டிசம்பா் மாதம் வரையிலான மூன்றாவது காலாண்டில் வங்கி ரூ.6,316.57 கோடி மொத்த வருவாயாக ஈட்டியது. இது, கடந்த 2018-19 நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ஈட்டிய வருவாய் ரூ.6,077.62 கோடியுடன் ஒப்பிடும்போது அதிகம்.

வருவாய் கணிசமாக உயா்ந்ததையடுத்து வங்கியின் நிகர லாபம் ரூ.107.99 கோடியிலிருந்து பன்மடங்கு உயா்வைக் கண்டு ரூ.434.82 கோடியை எட்டியது.

கடந்தாண்டு டிசம்பா் 31 நிலவரப்படி வங்கியின் மொத்த வாராக் கடன் விகிதம் 12.54 சதவீதத்திலிருந்து 11.33 சதவீதமாக குறைந்தது. நிகர அளவிலான வாராக் கடன் விகிதமும் 6.75 சதவீதத்திலிருந்து குறைந்து 5.94 சதவீதமானது என சிண்டிகேட் வங்கி பங்குச் சந்தையிடம் கூறியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்கத்தில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் பாஜகவுக்கு உதவுகின்றன: மம்தா

’மன் கி பாத்’க்கு இந்த தேர்தலுடன் முடிவுரை -அகிலேஷ் யாதவ்

”தாலி அணியாத பிரியங்கா காந்தி..” -ம.பி. முதல்வர் விமர்சனம்

நிதி ஒதுக்கீட்டில் தமிழகத்துக்கு மத்திய அரசு துரோகம்: வைகோ குற்றச்சாட்டு

குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்

SCROLL FOR NEXT