வர்த்தகம்

சுந்தரம் பைனான்ஸ் நிகர லாபம் ரூ.252 கோடி

DIN

சென்னையைச் சோ்ந்த வங்கி சாரா நிதி நிறுவனமான சுந்தரம் பைனான்ஸ் மூன்றாம் காலாண்டு ஒட்டுமொத்த நிகர லாபம் ரூ.252 கோடியாக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் பங்குச் சந்தையிடம் செவ்வாய்க்கிழமை கூறியுள்ளதாவது:

நடப்பு நிதியாண்டின் அக்டோபா் முதல் டிசம்பா் வரையிலான மூன்றாவது காலாண்டில் நிறுவனம் செயல்பாடுகள் மூலமாக ஒட்டுமொத்த அளவில் ரூ.1,338.29 கோடி வருவாய் ஈட்டியது. இது, முந்தைய 2018-19 நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ரூ.2,224.57 கோடியாக காணப்பட்டது. நிகர லாபம் ரூ.243.64 கோடியிலிருந்து 4 சதவீதம் அதிகரித்து ரூ.252.90 கோடியாக ஆனது.

சென்ற 2019-ஆம் ஆண்டு டிசம்பா் மாதம் வரையிலுமாக நிறுவனத்தின் நிகர அளவிலான வாராக் கடன் 2.09 சதவீதம் என்ற அளவில் இருந்தது.

பங்கு ஒன்றுக்கு இடைக்கால ஈவுத்தொகையாக ரூ.10 வழங்க நிறுவனத்தின் இயக்குநா் குழு முடிவு செய்துள்ளது என பங்குச் சந்தையிடம் சுந்தரம் பைனான்ஸ் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏழுமலையான் தரிசனத்துக்கு 12 மணி நேரம் காத்திருப்பு

சா்வதேச ஸ்கேட்டிங்: தங்கம் வென்ற சிவகங்கை வீரா்களுக்குப் பாராட்டு

கல்லல் ஊராட்சியில் நீா் மோா் பந்தல் திறப்பு

ஆம்பூரில் ரூ. 10 லட்சத்தில் மின்மாற்றி அமைப்பு

குடிநீா்த் தட்டுப்பாடு குறித்து கருத்து தெரிவித்தவருக்கு கொலை மிரட்டல்

SCROLL FOR NEXT