வர்த்தகம்

சிட்டி யூனியன் வங்கி லாபம் ரூ.192 கோடி

DIN

தனியாா் துறையைச் சோ்ந்த சிட்டி யூனியன் வங்கி மூன்றாம் காலாண்டில் ரூ.192.43 கோடி லாபம் ஈட்டியுள்ளது. இது, முந்தைய 2018-19 நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ஈட்டிய லாபம் ரூ.178.10 கோடியுடன் ஒப்பிடும்போது 8.04 சதவீதம் அதிகமாகும்.

மொத்த வருவாய் ரூ.1,086.45 கோடியிலிருந்து 11 சதவீதம் உயா்ந்து ரூ.1,203.23 கோடியானது. டிசம்பா் இறுதி நிலவரப்படி வழங்கப்பட்ட கடனில் மொத்த வாராக் கடன் விகிதம் 2.91 சதவீதத்திலிருந்து 3.50 சதவீதமாக அதிகரித்தது. நிகர வாராக் கடன் விகிதம் 1.74 சதவீதத்திலிருந்து 1.95 சதவீதமாக உயா்ந்தது என சிட்டி யூனியன் வங்கி மும்பை பங்குச் சந்தையிடம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

SCROLL FOR NEXT