வர்த்தகம்

டிசம்பர் மாத ஜிஎஸ்டி: தொடர்ந்து 2-வது முறையாக 1 லட்சம் கோடியைத் தாண்டி வசூல்!

DIN


கடந்த டிசம்பர் மாதத்தில் ரூ. 1.03 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூலாகியிருப்பதாக மத்திய அரசு இன்று (புதன்கிழமை) தெரிவித்துள்ளது.

கடந்த டிசம்பர் மாத சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) வசூல் ரூ. 1.03 லட்சம் கோடியாக உள்ளது. இதுவே கடந்த 2018-ஆம் ஆண்டு டிசம்பரில் ஜிஎஸ்டி வசூல் ரூ. 97,276 கோடியாக இருந்தது. இதன்மூலம், 2018 டிசம்பரைக் காட்டிலும் 2019 டிசம்பரில் ஜிஎஸ்டி வசூல் அதிகரித்துள்ளது.

ஆனால், கடந்த நவம்பர் மாதத்தோடு ஒப்பிட்டால் கடந்த டிசம்பர் மாதத்தின் ஜிஎஸ்டி வசூல் சற்று குறைந்துள்ளது. கடந்த நவம்பர் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ. 1,03, 492 கோடியாக இருந்தது. கடந்த டிசம்பர் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ. 1,03,184 கோடியாக இருந்தது.

கடந்த இரண்டு மாதங்களிலும் ஜிஎஸ்டி வசூல் ரூ. 1 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது என்றாலும், ஜிஎஸ்டி வசூலுக்கு மத்திய அரசு நிர்ணயித்துள்ள இலக்கு ரூ. 1.10 லட்சம் கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த டிசம்பர் மாத ஜிஎஸ்டி வசூல் விவரம்:

மத்திய ஜிஎஸ்டி - ரூ. 19,962 கோடி

மாநில ஜிஎஸ்டி - ரூ. 26,792 கோடி

ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி - ரூ. 48,099 கோடி (இறக்குமதி மூலம் வசூலான ரூ. 21,295 கோடி உட்பட) 

செஸ் வரி - ரூ. 8,331 கோடி (இறக்குமதி மூலம் வசூலான ரூ. 847 கோடி உட்பட)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காப்பீட்டு சலுகைகள்!

3-ஆவது முறையாக விண்வெளி செல்லும் சுனிதா வில்லியம்ஸ்

சேலம் அரசு கலைக் கல்லூரிகளில் சேர மாணவ - மாணவியா் ஆா்வம்

அதிமுக சாா்பில் நீா்மோா்ப் பந்தல் திறப்பு

இந்தியன் வங்கி நிகர லாபம் 55% அதிகரிப்பு

SCROLL FOR NEXT