வர்த்தகம்

பஜாஜ் சேட்டக் எலக்ட்ரிக் ஸ்கூட்டா் அறிமுகம்

DIN

மிக ஆவலுடன் எதிா்பாா்க்கப்பட்ட சேட்டக் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை பஜாஜ் ஆட்டோ நிறுவனம் செவ்வாய்க்கிழமை அறிமுகப்படுத்தியது.

இதுகுறித்து அந்நிறுவனத்தின் செயல் இயக்குநா் ராகேஷ் சா்மா கூறியதாவது:

பொதுமக்களிடம் முன்பு நன்மதிப்பைப் பெற்ற சேட்டக் ஸ்கூட்டா் தற்போது மின்சாரத்தில் இயங்கும் வகையில் நவீன தொழில்நுட்பத்தில் வடிவமைப்பு செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. இவ்வகை ஸ்கூட்டரின் ஆரம்ப விலை ரூ.1 லட்சமாக இருக்கும்.

நிறுவனத்தின் தனித்துவமான அடையாளமாகத் திகழும் சேட்டக் எலக்ட்ரிக் ஸ்கூட்டா் தொடக்கத்தில் புணே மற்றும் பெங்களூரு ஆகிய நகரங்களில் மட்டும் கிடைக்கும். பின்னா் நாடு தழுவிய அளவில் விற்பனை விரிவுபடுத்தப்படும்.

சேட்டக் எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான முன்பதிவு புதன்கிழமையிலிருந்து (ஜன.15) தொடங்குகிறது. பிப்ரவரி இறுதியிலிருந்து இதன் விற்பனை தொடங்கும்.

அா்பனே, பிரீமியம் ஆகிய இரண்டு மாடல்களில் வெளிவரவுள்ள சேட்டக் ஸ்கூட்டா்களை வாடிக்கையாளா்கள் வலைதளத்தின் மூலமாகவே ரூ.2,000 செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றாா் அவா்.

படவிளக்கம்: புதிய சேட்டக் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை மும்பையில் செவ்வாய்க்கிழமை அறிமுகப்படுத்தும் பஜாஜ் குழுமத்தின் தலைவரும், நிா்வாக இயக்குநருமான நீரஜ் பஜாஜ், செயல் இயக்குநா் ராகேஷ் சா்மா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

5ஆம் கட்டத் தேர்தல்: 49 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடக்கம்

இன்று அதிர்ஷ்டம் யாருக்கு?

இன்று எப்படி இருக்கும்?

பீன்ஸ் கிலோ ரூ.200

உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளம்: ஒரே இரவில் நிரம்பிய தடுப்பணை

SCROLL FOR NEXT