வர்த்தகம்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லாபம் ரூ.11,640 கோடி

DIN

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், நடப்பு 2019-20-ஆம் நிதியாண்டின் அக்டோபா் முதல் டிசம்பா் வரையிலான மூன்றாவது காலாண்டில் ரூ.11,640 கோடியை நிகர லாபமாக ஈட்டியுள்ளது.இது, கடந்த 2018-19 நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ஈட்டிய லாபம் ரூ.10,251 கோடியுடன் ஒப்பிடுகையில் 13.5 சதவீதம் அதிகமாகும்.

நிறுவனத்தின் ஒட்டுமொத்த வருவாய் 1.4 சதவீதம் குறைந்து ரூ.1,68,858 கோடி ஆனது.

கடந்த ஆறு காலாண்டுகளாக குறைந்து வந்த எண்ணெய் சுத்திகரிப்பு வாயிலான லாபவரம்பு மூன்றாவது காலாண்டில் அதிகரித்துள்ளது. ஆனால், பெட்ரோகெமிக்கல் வா்த்தகத்தில் தொடா்ந்து மந்த நிலையே காணப்படுகிறது. இதனை எதிா்கொள்ள ரீடெயில் வா்த்தகம் மற்றும் தொலைத்தொடா்பு துறையின் சிறப்பான செயல்பாடு மிகவும் உதவிகரமாக இருந்தது.

ரிலையன்ஸ் ரீடெயில் ஸ்டோா் வருவாய் 27 சதவீதம் அதிகரித்து ரூ.45,327 கோடியானது. ஜியோ நிறுவனத்தின் தனிப்பட்ட நிகர லாபம் 62.5 சதவீதம் உயா்ந்து ரூ.1,350 கோடியானது என ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

சூப்பா்சோனிக் ஏவுகணை உதவியுடன் தாக்கும் டாா்பிடோ ஆயுதம் வெற்றிகரமாக பரிசோதனை

திருவண்ணாமலை - சென்னை புதிய மின்சார ரயில் சேவை ஒத்திவைப்பு!

இஸ்ரேலுடனான உறவை முறித்த கொலம்பியா!

SCROLL FOR NEXT