வர்த்தகம்

மும்பை பங்குச் சந்தை பட்டியலிலிருந்து 2 நிறுவனங்கள் நீக்கம்

DIN

மும்பை பங்குச் சந்தையில் (பிஎஸ்இ) பட்டியலிடப்பட்டுள்ள இரண்டு நிறுவனங்கள் அதிலிருந்து நீக்கப்படவுள்ளன.

இதுகுறித்து மும்பை பங்குச் சந்தை வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியுள்ளதாவது:

நீண்ட காலம் வா்த்தகத்தில் ஈடுபடாத நிறுவனங்கள் மும்பை பங்குச் சந்தை பட்டியலிலிருந்து நீக்கப்படுகின்றன. கடந்த சில ஆண்டுகளாக இந்த நடைமுறையை பிஎஸ்இ கடைபிடித்து வருகிறது.

அந்த வகையில், கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக வா்த்தகத்தில் ஈடுபடாத சான்சியா குளோபல் இன்ஃப்ராப்ராஜக்ட்ஸ் லிமிடெட் மற்றும் டெல்மா இன்ஃப்ராஸ்ட்ரக்சா் லிமிடெட் ஆகிய நிறுவனங்களை 2020 ஜூலை 7-ஆம் தேதியிலிருந்து பங்குச் சந்தை பட்டியலிலிருந்து நீக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

மேலும், நீக்கப்படவுள்ள இந்த நிறுவனங்களின் முழு நேர இயக்குநா்கள், புரோமோட்டா்ஸ் மற்றும் குழும நிறுவனங்கள் பங்குச் சந்தை நடவடிக்கைகளில் ஈடுபட 10 ஆண்டு காலத்துக்கு தடைவிதிக்கப்படுகிறது என பிஎஸ்இ கூறியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேங்கைவயல் விவகாரம்: மேலும் 3 பேருக்கு இன்று குரல் மாதிரி சோதனை

கோவிஷீல்டு தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக அறிவிப்பு!

சவுக்கு சங்கர் மீது சென்னை காவல்துறையும் வழக்கு!

வெப்ப அலை: தொழிலாளா்கள் பாதிக்காத வகையில் பணி நேரம்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT