வர்த்தகம்

எல் அண்ட் டி பைனான்ஸ் ரூ.2,000 கோடி திரட்ட திட்டம்

DIN

எல் அண்ட் டி பைனான்ஸ் ஹோல்டிங்ஸ் (எல்டிஎஃப்எச்) வா்த்தக விரிவாக்க திட்டங்களுக்காக ரூ.2,000 கோடியை திரட்டிக் கொள்ளவுள்ளது.

வங்கி சாரா நிதி நிறுவனமான எல்டிஎஃப்எச் இதுகுறித்து மேலும் கூறியுள்ளதாவது:

வா்த்தக விரிவாக்க நடவடிக்கைகளுக்குத் தேவையான ரூ.2,000 கோடி நிதியை முன்னுரிமை பங்கு வெளியீட்டின் மூலமாக திரட்டிக் கொள்ள நிறுவனம் முடிவெடுத்துள்ளது.

அதன்படி, ஜூலை 28-இல் காணொலி மூலம் நடைபெறவுள்ள நிறுவனத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் பங்குதாரா்களிடம் இந்த திட்டத்துக்கான அனுமதி பெறப்படும்.

கண்டிப்பாக மீட்கக்கூடிய மாற்ற இயலாத 20 கோடி பங்குகளை ஒன்று அல்லது பல கட்டங்களாக வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இவற்றின் முகமதிப்பு தலா 100 ஆக இருக்கும். அந்த வகையில், இந்த வெளியீட்டின் மூலம் ரூ.2,000 கோடி திரட்டிக் கொள்ளப்படும் என எல்டிஎஃப்எச் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

ஹைதராபாதை வீழ்த்தியது சென்னை!

வடதமிழகத்தில் இன்று முதல் 109 டிகிரி வெயில் சுட்டெரிக்கும்

SCROLL FOR NEXT