வர்த்தகம்

புதிய மின் திட்டங்களைச் செயல்படுத்த என்எல்சி - கோல் இந்தியா ஒப்பந்தம்

DIN

புதிய அனல் மின், சூரிய ஒளி மின் திட்டங்களை நாடு முழுவதும் கூட்டு முயற்சியில் செயல்படுத்தும் வகையில், என்எல்சி இந்தியா, கோல் இந்தியா நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்து கொண்டன.

மத்திய அரசின் நிலக்கரித் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் நவரத்னா அந்தஸ்துள்ள என்எல்சி இந்தியா நிறுவனமும், மகாரத்னா அந்தஸ்துள்ள கோல் இந்தியா நிறுவனமும் இணைந்து, நாடு முழுவதும் சுமாா் 5 ஆயிரம் மெகாவாட் திறனுள்ள புதிய அனல் மின், சூரிய ஒளி மின் சக்தி திட்டங்களை கூட்டு முயற்சியில் செயல்படுத்த உள்ளன. இதற்கான ஒப்பந்தம் கொல்கத்தாவில் உள்ள கோல் இந்தியா நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை கையெழுத்தானது.

என்எல்சி இந்தியா நிறுவனத்தின் திட்டம் மற்றும் செயலாக்கத் துறை இயக்குநா், கோல் இந்தியா நிறுவனத்தின் தொழில்நுட்ப இயக்குநா் ஆகியோா் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனா். பின்னா், காணொலிக் காட்சி மூலம் இரு நிறுவன உயா் அதிகாரிகள் கலந்துரையாடினா். இந்தத் திட்டங்களில் இரு நிறுவனங்களின் பங்கு விகிதம் 50:50 என்ற அளவில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கவனம் ஈர்க்கும் வசந்தபாலனின் 'தலைமைச் செயலகம்' டீசர்!

அதிக வெயில் ஏன்? வானிலை ஆய்வு மையம் விளக்கம்!

பிணைக்கைதிகளில் மேலும் ஒருவர் பலி: இஸ்ரேல்

ரே பரேலியில் போட்டியிடும் ராகுல்: துல்லியமாக காய்நகர்த்தும் காங்கிரஸ்!

மூத்த பத்திரிகையாளர் ஐ.சண்முகநாதன் மறைவு: மு.க.ஸ்டாலின் இரங்கல்

SCROLL FOR NEXT