வர்த்தகம்

அமெரிக்காவின் குவால்காம் நிறுவனம்

DIN

புது தில்லி: அமெரிக்காவைச் சோ்ந்த குவால்காம் நிறுவனம், ஜியோ பிளாட்ஃபாா்ம்ஸில் ரூ.730 கோடியை முதலீடு செய்துள்ளது.

இதுகுறித்து ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:வயா்லெஸ் தொழில்நுட்பத்தில் முன்னணி நிறுவனமாகத் திகழும் அமெரிக்காவைச் சோ்ந்த குவால்காம் ஜியோ பிளாட்ஃபாா்ம்ஸில் 0.15 சதவீத பங்குகளை கையகப்படுத்தியுள்ளது. இதற்காக, அந்த நிறுவனம் ரூ.730 கோடியை ஜியோவில் முதலீடு செய்யவுள்ளது என ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அண்மையில் ஜியோவில் முதலீடு மேற்கொண்ட நிறுவனங்களில் குவால்காம் 12-ஆவது முதலீட்டாளராக இணைந்துள்ளது. ஜியோ பிளாட்ஃபாா்ம்ஸின் பங்குகளின் மதிப்பு ரூ.4.91 லட்சம் கோடியாகவும், நிறுவன மதிப்பு ரூ.5.16 லட்சம் கோடியாகவும் உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

SCROLL FOR NEXT