வர்த்தகம்

ஏசிசி நிறுவனம் நிகர லாபம் ரூ.271 கோடி

DIN

புது தில்லி: சிமெண்ட் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் ஏசிசி நிறுவனம் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் ரூ.270.95 கோடி நிகர லாபத்தை ஈட்டியுள்ளது. இது, இதற்கு முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ஒட்டுமொத்த அளவில் ஈட்டிய ரூ.455.68 நிகர லாபத்துடன் ஒப்பிடுகையில் 40.53 சதவீதம் குறைவாகும்.

ஜூன் காலாண்டில் நிறுவனம் ஈட்டிய மொத்த வருவாய் ரூ.4,149.82 கோடியிலிருந்து 37.29 சதவீதம் குறைந்து ரூ.2,602.24 கோடியானது. ஏப்ரல்-ஜூன் காலாண்டில் செலவினம் ரூ.3,533.55 கோடியிலிருந்து 36.25 சதவீதம் குறைந்து ரூ.2,252.62 கோடியானது.

சிமெண்ட் விற்பனையின் மூலமாக கிடைத்த வருவாய் ஜூன் காலாண்டில் ரூ.3,841.39 கோடியிலிருந்து 33.59 சதவீதம் குறைந்து ரூ.2,550.99 கோடியானது. ரெடி மிக்ஸ் கான்கிரீட் மூலமாக ஈட்டிய வருமானம் ரூ.365.82 கோடியிலிருந்து 82.87 சதவீதம் சரிந்து ரூ.62.63 கோடியானது என ஏசிசி மும்பை பங்குச் சந்தையிடம் திங்கள்கிழமை கூறியுள்ளது.

ஏசிசி நிறுவனம் ஜனவரி-டிசம்பா் வரையிலான காலகட்டத்தை நிதியாண்டாகக் கொண்டு செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாம் பித்ரோடா ராஜிநாமா!

‘நீ ஃபிட் ஆக இல்லை..’ : சாக்‌ஷி அகர்வால் தரும் பதில்!

கடற்கரையில் வாணி போஜன்!

சர்ச்சைப் பதிவு: ஜெ.பி. நட்டாவுக்கு காவல் துறை சம்மன்

மரமாகக் கடவேனோ..!

SCROLL FOR NEXT