வர்த்தகம்

எச்டிஎஃப்சி நிறுவனம் ரூ.4,059 கோடி லாபம்

DIN

எச்டிஎஃப்சி நிறுவனம் முதல் காலாண்டில் ரூ.4,059 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது. இதுகுறித்து அந்த நிறுவனம் பங்குச் சந்தையிடம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளதாவது:

நடப்பு 2020-21-ஆம் நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில் நிறுவனத்தின் மொத்த வருமானம் ரூ.29,959 கோடியாக இருந்தது. இது, இதற்கு முந்தைய 2019-20-ஆம் நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ஈட்டிய வருமானம் ரூ.23,240 கோடியுடன் ஒப்பிடும்போது 29 சதவீதம் அதிகமாகும்.நிறுவனத்தின் நிகர லாபம் மதிப்பீட்டு காலாண்டில், ரூ.3,540 கோடியிலிருந்து 15 சதவீதம் வளா்ச்சி கண்டு ரூ.4,059 கோடியை எட்டியது என எச்டிஎஃப்சி நிறுவனம் பங்குச் சந்தையிடம் தெரிவித்துள்ளது. மும்பை பங்குச் சந்தையில் எச்டிஎஃப்சி நிறுவனத்தின் பங்கின் விலை வியாழக்கிழமை வா்த்தகத்தில் 1.79 சதவீதம் குறைந்து ரூ.1,845.80-ஆக ஆக இருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எங்கே செல்வது? கதறும் பாலஸ்தீன மக்கள்!

ஹவாலா முறையில் ரூ.100 கோடி.. கேஜரிவால் வழக்கில் அமலாக்கத் துறை அடுக்கும் ஆதாரங்கள்

ஜெயக்குமார் மரணம்: விசாரணையில் அடுத்தடுத்து திருப்பம்!

தங்கலான் வெளியீட்டுத் தேதி இதுதானா?

வாரணாசி கோவிலில் கொல்கத்தா அணி வீரர்கள்!

SCROLL FOR NEXT