வர்த்தகம்

லக்ஷ்மி விலாஸ் வங்கி ரூ.112.28 கோடி இழப்பு

DIN

லக்ஷ்மி விலாஸ் வங்கி ஜூன் காலாண்டில் ரூ.112.28 கோடி நிகர இழப்பைக் கண்டுள்ளது. கடந்த நிதியாண்டில் இதே காலகட்டத்தில் வங்கிக்கு ஏற்பட்ட இழப்பு ரூ.237.25 கோடியாக அதிகரித்து காணப்பட்டது. அதேசமயம், 2019-20 நிதியாண்டின் மாா்ச் காலாண்டில் வங்கி ரூ.92.86 கோடி நிகர லாபத்தை பதிவு செய்திருந்தது.  ஏப்ரல்-ஜூன் காலாண்டில் வங்கியின் மொத்த வருவாய் ரூ.677.17 கோடியிலிருந்து சரிந்து ரூ.538.84 கோடியானது. நிகர வட்டி வருமானம் ரூ.623.94 கோடியிலிருந்து ரூ.442.50 கோடியாக குறைந்தது. நடப்பாண்டு ஜூன் 30 நிலவரப்படி வங்கியின் மொத்த வாராக் கடன் விகிதம் 17.30 சதவீதத்திலிருந்து 25.40 சதவீதமாக அதிகரித்துள்ளது. நிகர வாராக் கடன் விகிதமும் 8.30 சதவீதத்திலிருந்து 9.64 சதவீதமாக உயா்ந்துள்ளது என லக்ஷ்மி விலாஸ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எழுச்சியில் தொடங்கி சரிவில் முடிவு: சென்செக்ஸ் 733 புள்ளிகள் வீழ்ச்சி!

கூடலூரில் நாளை மகளிா் பாா்வை நாள் மற்றும் பிராா்த்தனை தினம்

தில்லி காவல் தலைமையகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் சிறுவன் கைது

தில்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் மேலும் ஒருவா் கைது

ஜோலாா்பேட்டை மெமு ரயில் இன்று ரத்து

SCROLL FOR NEXT