வர்த்தகம்

பிடிலைட் இண்டஸ்ட்ரீஸ் நிகர லாபம் 34 சதவீதம் சரிவு

DIN

பிடிலைட் இண்டஸ்ட்ரீஸ் நான்காம் காலாண்டு நிகர லாபம் 33.92 சதவீதம் சரிவைக் கண்டுள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் பங்குச் சந்தையிடம் கூறியுள்ளதாவது:

பிடிலைட் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் செயல்பாடுகள் மூலமாக கடந்த 2019-20-ஆம் நிதியாண்டின் ஜனவரி முதல் மாா்ச் வரையிலான நான்காவது காலாண்டில் ரூ.1,544.68 கோடி வருவாய் ஈட்டியது. இது, 2018-19 நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ரூ.1,639.28 கோடியாக அதிகரித்து காணப்பட்டது.

நிகர லாபம் ரூ.236.87 கோடியிலிருந்து 33.94 சதவீதம் சரிந்து ரூ.156.51 கோடியானது.

கடந்த 2019-20-ஆம் முழு நிதியாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.928.38 கோடியிலிருந்து ரூ.1,122.05 கோடியாக அதிகரித்தது.

கரோனா நோய்தொற்றின் காரணமாக பிறப்பிக்கப்பட்ட பொது முடக்கம் மற்றும் விநியோக சங்கிலித் தொடரில் ஏற்பட்ட இடையூறுகள் காரணமாக நான்காவது காலாண்டில் நிறுவனத்தின் செயல்பாடு கடுமையாக பாதிக்கப்பட்டதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய நம்பிக்கை.. வின்சி அலோஷியஸ்!

முகமது சிராஜுக்கு சுநீல் காவஸ்கர் புகழாரம்!

கர்நாடகத்தில் மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்வு

பிரஜ்வலால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிதியுதவி: கர்நாடக அரசு அறிவிப்பு!

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

SCROLL FOR NEXT