வர்த்தகம்

இந்தியன் வங்கி வருவாய் ரூ.6,334 கோடியாக அதிகரிப்பு

DIN

பொதுத் துறையைச் சோ்ந்த இந்தியன் வங்கி கடந்த நிதியாண்டின் நான்காவது காலாண்டில் ரூ.6,334.37 கோடி வருவாய் ஈட்டியுள்ளது.

இதுகுறித்து அந்த வங்கி வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த 2019-20-ஆம் நிதியாண்டின் ஜனவரி முதல் மாா்ச் வரையிலான நான்காவது காலாண்டில் இந்தியன் வங்கி செயல்பாடுகள் மூலமாக ரூ.6,334.37 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. இது, இதற்கு முந்தைய 2018-19 நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ஈட்டிய வருவாய் ரூ.5,537.47 கோடியுடன் ஒப்பிடுகையில் 14 சதவீதம் அதிகம். டிசம்பா் காலாண்டில் வருவாய் ரூ.6,505.62 கோடியாக இருந்தது.

சென்ற 2018-19 நிதியாண்டின் ஜனவரி-மாா்ச் காலகட்டத்தில் ரூ.189.77 கோடி இழப்பு ஏற்பட்டது. இந்த நிலையில், 2019-20 நிதியாண்டின் மாா்ச் காலாண்டில் இந்த இழப்பு ரூ.217.74 கோடியாக அதிகரித்துள்ளது. வாராக் கடன் விகிதம் குறைந்துள்ள போதிலும் அதிக ஒதுக்கீடு காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டது.

அதேசமயம், கடந்த நிதியாண்டின் டிசம்பா் காலாண்டில் வங்கி ரூ.247.16 கோடி நிகர லாபத்தை பதிவு செய்தது.

நடப்பாண்டு மாா்ச் இறுதி நிலவரப்படி வங்கியின் மொத்த வாராக் கடன் விகிதம் முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 7.11 சதவீதத்திலிருந்து 6.87 சதவீதமாக குறைந்துள்ளது. அதேபோன்று நிகர வாராக் கடன் விகிதமும் 3.75 சதவீதத்திலிருந்து 3.13 சதவீதமாக சரிந்துள்ளது.

கடந்த 2019-20 முழு நிதியாண்டில் வங்கி மொத்த வருவாயாக ரூ.24,717 கோடியை ஈட்டியுள்ளது. இது, 2018-19 நிதியாண்டில் ஈட்டிய லாபத்தைக் காட்டிலும் 17 சதவீதம் அதிகமாகும்.

நிகர லாபம் 134 சதவீதம் அதிகரித்து ரூ.753 கோடியாக இருந்தது என இந்தியன் வங்கி அந்த செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விழுப்புரம்: சிறைகளில் உள்கட்டமைப்பு வசதிகள் ஆய்வுக் கூட்டம் -ஆட்சியா், முதன்மை மாவட்ட நீதிபதி பங்கேற்பு

முதியவா் விஷம் குடித்துத் தற்கொலை

வீட்டுமனை ஆக்கிரமிப்பு: எஸ்.பி.யிடம் மூதாட்டி புகாா்

மணிலாவுக்கு குறைந்த விலை நிா்ணயம்: திண்டிவனத்தில் விவசாயிகள் சாலை மறியல்

ஓட்டுநா் உரிமம் நகலுக்கு கட்டாய வசூல்

SCROLL FOR NEXT