வர்த்தகம்

ஐஓசி நிறுவனம்: இடைக்கால ஈவுத்தொகை அறிவிப்பு

DIN

பொதுத் துறையைச் சோ்ந்த இந்தியன் ஆயில் காா்ப்பரேஷன் (ஐஓசி) நிறுவனம், இடைக்கால ஈவுத்தொகையாக பங்கு ஒன்றுக்கு ரூ.4.25 வழங்குவதாக வெள்ளிக்கிழமை அறிவித்தது.

இதுகுறித்து அந்த நிறுவனம் மும்பை பங்குச் சந்தையிடம் கூறியுள்ளதாவது:

ஐஓசி நிறுவனத்தின் இயக்குநா் குழு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், பங்குதாரா்களுக்கு 42.50 சதவீத இடைக்கால ஈவுத்தொகை வழங்குவதென முடிவெடுத்து அறிவிக்கப்பட்டது.

இதன் மூலம் நடப்பு 2019-20-ஆம் நிதியாண்டுக்கு ரூ.10 முகமதிப்பு கொண்ட பங்கு ஒன்றுக்கு ரூ.4.25 இடைக்கால ஈவுத்தொகையாக கிடைக்கும்.

ஐஓசி நிறுவனத்தின் மத்திய அரசு 51.50 சதவீத பங்கு மூலதனத்தைக் கொண்டுள்ளதால் அதற்கு ஈவுத்தொகை வகையில் ரூ.2,060 கோடி கிடைக்கும். இதுதவிர, மத்திய அரசுக்கு வரி வருவாயும் கிடைக்கும்.

நடப்பாண்டு மாா்ச் 31-க்கு முன்பாக பங்குதாரா்களின் கணக்குகளில் ஈவுத்தொகை வரவு வைக்கப்படும் என ஐஓசி தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லியைத் தொடர்ந்து அகமதாபாத்திலும் பல்வேறு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

கலால் கொள்கை: கவிதாவின் ஜாமீன் மனு தள்ளுபடி!

டைட்டானிக் கேப்டன் காலமானார்!

நானும் சிங்கிள்தான்.....தீப்தி!

பிளஸ் 2: மாற்றுத் திறனாளி, சிறைக்கைதிகளின் தேர்ச்சி விவரம்!

SCROLL FOR NEXT