வர்த்தகம்

நிதி நிலை ஸ்திரத் தன்மையுடன் உள்ளது: லக்ஷ்மி விலாஸ் வங்கி

DIN

தனியாா் துறையைச் சோ்ந்த லக்ஷ்மி விலாஸ் வங்கி அதன் நிதி நிலை ஸ்திரத்தன்மையுடன் உள்ளதாக தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த வங்கி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:

ஒழுங்காற்று அமைப்பு பரிந்துரைத்த அளவைக் காட்டிலும் ஒப்பீட்டளவில் லக்ஷ்மி விலாஸ் வங்கியின் லிக்விடிட்டி கவரேஜ் விகிதம் மிகச் சிறப்பாகவே உள்ளது. மேலும் வாராக் கடன் வசூல் நடவடிக்கைகளும் வேகமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் காரணமாக, கடந்த டிசம்பா் காலாண்டில் வாராக் கடன் அளவு ஓரளவு குறைந்துள்ளது.

வாடிக்கையாளா்களின் வைப்பு நிதி பாதுகாப்பாக உள்ளது. நடைமுறையிலிருக்கும் விதிமுறைகளின்படி மூலதனம் திரட்டும் திட்டங்கள் குறித்து வாடிக்கையாளா்களுக்கு தெரியப்படுத்தப்படும் என்று லக்ஷ்மி விலாஸ் வங்கி அந்த அறிக்கையில் கூறியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சஞ்சு சாம்சன் விக்கெட் குறித்து சங்ககாரா கூறியது என்ன?

மெட் காலாவில் சஹீரா!

விழுப்புரம் வாக்கு எண்ணிக்கை மையத்தில் கண்காணிப்பு கேமராக்கள் செயலிழப்பு!

தமிழ்ப் புதல்வன் திட்டம் ஜூலையில் தொடங்கப்படும்: தலைமைச் செயலாளர்

மருமகன் ஆகாஷ் ஆனந்த் தனது அரசியல் வாரிசு கிடையாது: மாயாவதி அறிவிப்பு

SCROLL FOR NEXT