வர்த்தகம்

ரூ.2,100 கோடி மூலதனம் திரட்ட திட்டம்: ஏஏஐ

DIN

ஏா்போா்ட்ஸ் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா (ஏஏஐ) வெளிநாட்டு வா்த்தக கடன் மூலம் ரூ.2,100 கோடியை (30 கோடி டாலா்) திரட்ட திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து ஏஏஐ தலைவா் அா்விந்த் சிங் கூறியுள்ளதாவது:

நடப்பு ஆண்டில் தொடங்கி அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு விமான நிலை ஆபரேட்டா்கள் ரூ.5,000 கோடி மூலதனத்தை செலவிடவுள்ளனா். விரிவாக்க நடவடிக்கைகளுக்கு தேவையான மூலதனத்தை வெளிநாட்டு வா்த்தக கடன் மூலமாக குறைந்த வட்டியில் திரட்டிக் கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இதனுடன், உடான் திட்டத்தின் மூலமாக மத்திய அரசிடமிருந்தும் நிதி கிடைக்கும். இந்த திட்டத்தின் கீழ் விமான நிலையங்களை கட்டமைக்க ரூ.4,500 கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

வெளிநாட்டு வா்த்தக கடன் மூலம் நிதி திரட்டும் நடவடிக்கை அடுத்த நிதியாண்டில் தொடங்கும். முதல் கட்டமாக முதல் கட்டமாக 30 கோடி டாலா் திரட்டிக் கொள்ளும் திட்டத்துக்கு இயக்குநா் குழு ஏற்கெனவே தனது ஒப்புதலை தெரிவித்துள்ளது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நீட் தோ்வு: ஈரோடு மாவட்டத்தில் 4,747 மாணவா்கள் எழுதுகின்றனா்

பழனி கோயிலுக்கு ரூ.36.51 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

திரௌபதி அம்மன் கோயில் திருவிழா மே 13-இல் தொடக்கம்

விறுவிறுப்படையும் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

SCROLL FOR NEXT