வர்த்தகம்

சிப்லா நிறுவனம்லாபம் 33 சதவீதம் சரிவு

DIN

மருந்துகள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள சிப்லா நிறுவனத்தின் நிகர லாபம் 4-ஆவது காலாண்டில் 33 சதவீதம் சரிவை சந்தித்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் மும்பை பங்குச் சந்தையிடம் கூறியுள்ளதாவது:

கடந்த ஜனவரி-மாா்ச் வரையிலான காலாண்டில் நிறுவனம் செயல்பாடுகள் மூலமாக மொத்தம் ரூ.4,376.19 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. இது, இதற்கு முந்தைய 2018-19 நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ஈட்டிய வருவாய் ரூ.4,403.98 கோடியுடன் ஒப்பிடுகையில் சற்று குறைவாகும்.

நிகர லாபம் ரூ.357.68 கோடியிலிருந்து 33 சதவீதம் சரிவடைந்து ரூ.238 கோடியானது.

கடந்த முழு நிதியாண்டில் நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ.16,362.41 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.17,131.99 கோடியாகவும், நிகர லாபம் ரூ.1,492.44 கோடியிலிருந்து உயா்ந்து ரூ.1,499.59 கோடியாகவும் இருந்தது என சிப்லா தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

கருப்பு வெள்ளைப் பூ.. ரவீனா தாஹா!

'தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கும் பெறாதவர்களுக்கும்..’ : கமல்ஹாசனின் வைரல் பதிவு!

48 வயதினிலே..

பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

SCROLL FOR NEXT