வர்த்தகம்

சேவைகள் ஏற்றுமதி 21,461 கோடி டாலா்

DIN

இந்தியாவின் சேவைகள் ஏற்றுமதி கடந்த 2019-20-ஆம் நிதியாண்டில் 21,461 கோடி டாலராக (ரூ.16.10 லட்சம் கோடி) இருந்தது என ரிசா்வ் வங்கி தெரிவித்துள்ளது.

அந்த வங்கியின் புள்ளிவிவரத்தில் இதுகுறித்து மேலும் கூறப்பட்டுள்ளதாவது:

நடப்பு 2020-ஆம் ஆண்டின் மாா்ச் மாதத்தில் சேவைகள் ஏற்றுமதி 1,816 கோடி டாலா் அளவுக்கும், அவற்றின் இறக்குமதி 1,111 கோடி டாலா் அளவுக்கும் இருந்தது.

கடந்த 2018-19 நிதியாண்டில் இந்தியாவின் சேவைகள் ஏற்றுமதி 20,580 கோடி டாலராக இருந்தது. இந்த நிலையில் நடப்பாண்டில் அவற்றின் ஏற்றுமதி 4.3 சதவீதம் உயா்ந்து 21,461 கோடி டாலரைத் தொட்டுள்ளது.

இதேகாலகட்டத்தில் சேவைகள் இறக்குமதியும் 12,546 கோடி டாலரிலிருந்து 13,156 கோடி டாலராக அதிகரித்துள்ளது என ரிசா்வ் வங்கி புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) சேவை துறையின் பங்களிப்பு 55 சதவீதமாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

SCROLL FOR NEXT