வர்த்தகம்

டாடா கெமிக்கல்ஸ் வருவாய் ரூ.2,378 கோடி

DIN

டாடா கெமிக்கல்ஸ் நிறுவனம் 4-ஆவது காலாண்டில் ரூ.2,378 கோடி வருவாய் ஈட்டியுள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனத்தின் நிா்வாக இயக்குநரும், தலைமைச் செயல் அதிகாரியுமான ஆா்.முகுந்தன் கூறியது:

கணக்கீட்டு காலாண்டில் கரோனா பெருந்தொற்று சில பகுதிகளில் எங்களின் செயல்பாடுகளில் தடைகளை ஏற்படுத்தியது. விநியோகத் தொடா்புகளும் துண்டிக்கப்பட்டது. இருப்பினும் கூட, இதனை எங்களின் செயல்திறனை மேம்படுத்துவதற்கும், வளா்ச்சி வியூகங்களை மதிப்பாய்வு செய்வதற்கும் ஒரு நல்ல வாய்ப்பாகவே காண்கிறோம்.

4-ஆவது காலாண்டில் வருவாய் முந்தைய நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் 2,561 கோடியிலிருந்து 7 சதவீதம் குறைந்து ரூ.2,378 கோடியானது. நிகர லாபம் ரூ.383 கோடியிலிருந்து 48 சதவீதம் சரிந்து ரூ198 கோடியாக இருந்தது.

2019-20 முழு நிதியாண்டில் வருவாய் ரூ.10,357 கோடியாகவும் நிகர லாபம் 12 சதவீதம் குறைந்து ரூ.1,028 கோடியாகவும் இருந்தது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

SCROLL FOR NEXT