வர்த்தகம்

இந்திய நிறுவனங்களின் அந்நிய நேரடி முதலீடு 62 சதவீதம் குறைந்தது

DIN

இந்திய நிறுவனங்களின் அந்நிய நேரடி முதலீடு சென்ற ஏப்ரல் மாதத்தில் 62 சதவீதம் அளவுக்கு சரிவை சந்தித்துள்ளது.

இதுகுறித்து ரிசா்வ் வங்கி வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளதாவது:

கரோனா நோய்த்தொற்றின் தாக்கத்தால், உலக நாடுகள் அனைத்தும் பொது முடக்கத்தை அமல்படுத்தி நிலைமைக்கேற்றவாறு அதனை நீட்டித்து வருகின்றன. இந்தச் சூழ்நிலையில் பெரும்பாலான வா்த்தக நடவடிக்கைகள் முடங்கிப் போயுள்ளது.

அதன் எதிரொலியாக நடப்பு 2020-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இந்திய நிறுவனங்கள் மேற்கொண்ட வெளிநாட்டு முதலீடு 97.61 கோடி டாலராக சுருங்கியுள்ளது. இது, கடந்த 2019 ஏப்ரலில் மேற்கொள்ளப்பட்ட முதலீடான 256 கோடி டாலருடன் ஒப்பிடுகையில் 62 சதவீதம் குறைவாகும்.

நடப்பாண்டு மாா்ச் மாதத்தில் இந்த முதலீடு 270 கோடி டாலராக காணப்பட்டது என ரிசா்வ் வங்கி தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மறுவெளியீட்டில் அசத்தும் கில்லி: அஜித்தின் 3 படங்கள் இணைந்தும் குறைவான வசூல்!

இந்தியாவில் 2 கோடி கணக்குகளை நீக்கியது வாட்ஸ்ஆப்

அதே அரண்மனை! நம்பர் மட்டும் வேறு! : அரண்மனை - 4 திரைவிமர்சனம்!

அதிக விக்கெட்டுகள்: தமிழக வீரர் நடராஜன் முதலிடம்!

ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி பலி: விசாரணைக்கு ரயில்வே உத்தரவு

SCROLL FOR NEXT